பட்டாசுக்கடையில் திடீர் தீ – 4 பேர் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி (26 அக் 2021): கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்தில் சிக்கி…

மேலும்...

கொரோனா வார்டு தனிப்படுத்தல் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 92 பேர் பலி!

பாக்தாத் (14 ஜூலை 2021):ஈராக் கொரோனா கொரோனா வார்டு தனிப்படுத்தல் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 92 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக் நசிரியா நகரில் அல் ஹுசைன் போதனா மருத்துவமனையின் கொரோனா வைரஸ் தனிமப் படுத்தல் வார்டில் இந்த தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. முன்னதாக, மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியிருந்தனர், ஆனால் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை. மற்றொரு அதிகாரி ஆக்ஸிஜன் சிலிண்டர்…

மேலும்...

புனே கொரோனா தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

புனே (21 ஜன 2021): நாட்டின் முன்னணி கோவிட் தடுப்பூசி உற்பத்தி மையமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புனே சீரம் நிறுவனத்தில் டெர்மினல் ஒன் அருகே மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. தீயணைப்பு படையின் பத்து பிரிவுகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளன. கோவிட் தடுப்பூசி உற்பத்தி ஆலை தீ விபத்து இல்லை என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உயிர் சேதம் எதுவும்…

மேலும்...

கோவில் தேர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

கோதாவரி (06 செப் 2020): ஆந்திர மாநிலத்தில் கோவில் தேர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர், கோவில் வளாகத்தில் உள்ள கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு திடீரென இந்த தேர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்….

மேலும்...