சவூதி அரேபியாவுக்கு பொறியாளர் வேலைக்கு வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ரியாத் (21 ஜன 2021): வெளிநாடுகளிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பொறியாளர் பணிக்கு வருவதற்கு முன்பு தொழில்முறை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொறியியல் பணிகளின் தரத்தை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. நாட்டில் தற்போதுள்ள பொறியியலாளர்களும் தகுதித் தேர்வை பல்வேறு கட்டங்களில் முடிப்பார்கள். தற்போது நாட்டில் பணிபுரியும் தகுதிவாய்ந்த வெளிநாட்டு பொறியியலாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான தொழில்முறை தேர்வு கடந்த மாதம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, புதிய பணி விசாக்களில் வரும்…

மேலும்...

கொரோனா பாதித்தும் கல்லூரி தேர்வை கைவிடாத மாணவர்!

வாணியம்பாடி (20 செப் 2020): கொரோனா பாதித்தும் கல்லூரி இறுதியாண்டு தேர்வை எழுதியுள்ளார் மாணவர் அனீசுர் ரஹ்மான்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷிராபாத் பகுதியை சேர்ந்த அனீசூர் ரஹமான் என்ற மாணவர், வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் இளங்கலை வணிகவியல் என்கிற பி.காம் பாடப்பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் கொரோனா தொற்று பாதிக்கபட்டு, கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளப்படி பல்கலைகழகம் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவ – மாணவிகளுக்கான தேர்வுகளை…

மேலும்...

சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (12 ஜூன் 2020): சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்யக் கோரி, மாணவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்படும் என கடந்த மாதம் 18ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பெற்றோர்கள் நேற்று வழக்கு…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அறிவிக்க முடிவு!

ஐதராபாத் (08 ஜூன் 2020): தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்யகோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கானது ஜூன் 11ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், தற்போது தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடத்தாமல் ஏற்கனவே நத்தப்பட்ட உள் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வில் தேர்ச்சி…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளி வைப்பு!

சென்னை (08 ஜூன் 2020): பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி, தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின்…

மேலும்...

கொரோனா அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு தேர்தல் நடத்தப்படுமா?

சென்னை (07 ஜூன் 2020): கொரோனா அறிகுறி இருந்தால் அந்த மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 15-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்கு வரும் மாணவர்கள், ஆசிரிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை அவசியம் என தெரிவித்துள்ளது. பள்ளி நுழைவாயிலேயே அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு 97 டிகிரி வரை வெப்பநிலை…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் 15 முதல் தொடக்கம் – ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு!

சென்னை (03 ஜூன் 2020): பத்தாம் வகுப்பு தேர்வு வரும் ஜுன் 15 ஆம் தேதி தொடங்க இருப்பதல் ஆசிரியர்கள் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ்…

மேலும்...

105 வயதில் தேர்வில் வெற்றி பெற்று சாதித்த பாட்டி!

கொல்லம் (06 பிப் 2020): கேரளாவில் 105 பாட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்று சாதித்து பலரது பாராட்டை பெற்றுள்ளார். கேரளாவில் எழுத்தறிவற்ற முதியவர்களுக்கு கல்வி போதிக்கும் பணிகளை மாநில எழுத்தறிவு இயக்கம் தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த வகுப்புகளில் படித்து வருவோருக்கு ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் கொல்லத்தை சேர்ந்த பகீரதி அம்மா என்ற 105 வயது மூதாட்டி 4-ம் வகுப்புக்கு இணையான தேர்வில்…

மேலும்...

ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுதும்போது குழந்தைகளுக்கு காத்திருக்கும் கொடுமைகள்!

சென்னை (30 ஜன 2020): ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப் பட்ட நிலையில் அவர்கள் பல ஆவணங்களை சமர்ப்பித்தால்தான் தேர்வு எழுத முடியுமாம். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப் பட்டதிலிருந்தே மாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அதனை மேலும் அதிகப்படுத்தும் வகையில், தேர்வு எழுத வரும் மாணவர்கள் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,…

மேலும்...

குரூப் 4 தேர்வு ரத்தாகுமா? – தொடரும் கைது!

சென்னை (28 ஜன 2020): குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு எழுதிய சிவராஜ் உட்பட 2 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக…

மேலும்...