திமுகவின் குடியாத்தம் எம்.எல்.ஏ மரணம் – திமுகவினர் அதிர்ச்சி!

சென்னை (28 பிப் 2020): குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை காலமானார். அவர் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை முடிந்து 20 நாள்களாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 9.20 மணியளவில் காலமானார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில்தான் குடியாத்தம் தொகுதியில் இவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு திமுகவினர்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ. மரணம்!

சென்னை (27 பிப் 2020): திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பிபி சாமி உடல் நலக்குறைவால் காலமானார். 2006-11 திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த கே.பி.பி சாமி, 2011 தேர்தலில் தோல்வியடைந்தார். 2016 தேர்தலில் மீண்டும் அத்தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். தற்போது, அக்கட்சியின் மீனவர் அணி செயலாளராக இருந்த சாமி, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி தனது 57-வது வயதில் அவர் காலமானார். சாமியின் மறைவுக்கு…

மேலும்...

அதிமுகவில் அடுத்த விக்கெட் – திமுகவின் பந்து வீச்சில் கிளீன் போல்ட்!

சென்னை (24 பிப் 2020): அதிமுகவில் இருந்து விலகிய ராஜ கண்ணப்பன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஏற்கனவே அறிவித்தபடி மதுரையில் ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ராஜ கண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். ராஜ கண்ணப்பட்ன் திமுகவில் இணைந்தது குறித்து செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து செல்லூர் ராஜூ கூறியதாவது, ராஜ கண்ணப்பன் தமிழகத்தில் செல்லாத நோட்டாகிவிட்டார். அவர் முன்பு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில்…

மேலும்...

திருச்சி மாநாட்டில் திருமாவளவன் திமுக மீது மறைமுக பாய்ச்சல்!

திருச்சி (23 பிப் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சி விரைவில் கோட்டையில் கொடியேற்றும் என்றும் திமுகவுக்கு பல மெஸேஜ்களையும், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று நடைபெற்ற தேசம் காப்போம் என்ற பெயரில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை கண்டித்து தேசம் காப்போம் என்ற பெயரில் நேற்று திருச்சியில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. அதில் பேசிய திருமாவளவன், திமுகவுக்கு பல மறைமுக மெஸேஜ்களை தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெறுமனே கோஷம்…

மேலும்...

வேறொரு பெண்ணுடன் கள்ள காதல் – திமுக பிரமுகர் மீது மனைவி பரபரப்பு புகார்!

சென்னை (22 பிப் 2020): வேறொரு பெண்ணுடன் கணவருக்கு கள்ள உறவு இருப்பதாக திமுக பிரமுகர் மீது அவரது மனைவி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். சென்னை: “என் கணவரை விட 15 வயசு பெரியவங்க அவங்க.. அக்கா, அக்கான்னு கூப்பிட்டார்.. கடைசியில 2 பேருக்கும் கள்ள உறவு இருந்திருக்கு… அவருடன் சேர்ந்து என் கணவர் கும்மாளம் அடிக்கிறார்.. இதை பற்றி திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் கூறியதால், கொலை செய்து விடுவதாக என்னை மிரட்டுகிறார்’ என,…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கோடிக்கணக்கான கையெழுத்துக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

சென்னை (16 பிப் 2020): CAA-NRC-NPRக்கு எதிரான கோடிக்கணக்கான கையழுத்துக்கள் குடியுரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான கையழுத்துக்களை பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பும் “கையெழுத்து இயக்கம்” நடைப்பெற்றது. தமிழகமெங்கும் பெறப்பட்ட கையெழுத்துக்களை இன்று 16.02.2020 இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பும் நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது. இதில் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் MLA, மனிதநேய மக்கள் கட்சி…

மேலும்...

டெல்லி வெற்றி திமுகவுக்கு உற்சாகம் – ஏன் தெரியுமா?

சென்னை (11 பிப் 2020): டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அசுர வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுகவுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாகை சூடியுள்ளது இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கு பரப்புரை உத்திகளை வகுத்து தரும் பிரஷாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு…

மேலும்...

இடஒதுக்கீடு விவகாரம் – ஆ.ராசா நாடாளுமன்றத்தில் சரமாரி கேள்வி!

புதுடெல்லி (10 பிப் 2020): மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க எம்.பி., ஆ.ராசா இடஒதுக்கீடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்தே, சமூக நீதிக்கும், இட ஒதுக்கீடு கொள்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். ஆ.ராசாவின் பேச்சுக்கு பா.ஜ.க எம்.பிக்களும், அமைச்சர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பா.ஜ.க உறுப்பினர்களின் கூச்சலைத் தொடர்ந்து பேசிய ஆ.ராசா, “உங்கள் அரசாங்கம் என்று நான் மத்திய…

மேலும்...

திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்!

சென்னை (07 பிப் 2020): அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுகவில் இணைகிறார். ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 96-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து விலகி கடந்த 2000-ம் ஆண்டில் ’மக்கள் தமிழ் தேசம்’ எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். பின்னர், 2006-ம் ஆண்டு தி.மு.க.வில் தனது கட்சியை இணைத்தார். இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ல் மீண்டும்…

மேலும்...

தோல்வியை கொண்டாடி ஆச்சர்யப்படுத்திய திமுக பிரமுகர்!

பரங்கிப்பேட்டை (04 பிப் 2020): தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தோல்வியை பிரியாணி விருந்து வைத்து கொண்டாடியுள்ளார் திமுக பிரமுகர். பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துபெருமாள். பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இதே பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் வெற்றிபெற்றார். 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்…

மேலும்...