சாக வேண்டும் என்றே வீதிக்கு வருகிறார்கள் – யோகி ஆதித்யநாத்தின் விஷம் கக்கும் பேச்சு!

லக்னோ (19 பிப் 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கு வருபவர்கள் சாகுவதற்காகவே வருகிறார்கள் என்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடூரமாக பேசியுள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் 2 மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களில் மட்டும் 22 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பலர் போரட்டங்களில் கலந்து கொள்ளாத அப்பாவி மக்களும் அடங்குவர். உத்திர பிரதேசத்தில் கொல்லப்பட்டவர்கள் யாரும்…

மேலும்...

சிஏஏ எதிர்ப்பு: அதிராம்பட்டினத்திலும் தொடங்கியது தொடர் போராட்டம்!

அதிராம்பட்டினம் (19 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஷாஹீன் பாக் மாடலில் அதிராம்பட்டினத்திலும் தொடர் போராட்டம் தொடங்கியது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தை பின்பற்றி, தொடர் போராட்டம் அனைத்து மாநிலங்களிலும் பரவியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இன்று மாநிலம் தழுவிய மாபெரும் அமைதி பேரணி சென்னையில்…

மேலும்...

மாணவர் கையில் கல் – பொய் சொன்ன ஊடகங்கள் – உண்மை பின்னணி வேறு!

புதுடெல்லி (19 பிப் 2020): ஜாமியா மில்லியா பல்கலைக்கழத்தில் போலீசார் கொடூர தாக்குதல் நடத்தியபோது, மாணவர் ஒருவர் கையில் கல் வைத்திருந்ததாக இந்தியா டுடே பொய் தகவலை வெளியிட அது என்ன என்பதை ஆல்ட் நியூஸ் (Alt News) என்ற ஊடகம் வெளிக் கொண்டு வந்துள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 15ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்ற போராட்டம் போலீசாரின் தாக்குதலால் வன்முறையாக மாறியது. அந்த வன்முறையில் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு காவல்துறையினர் தீவைத்தனர். அதுமட்டுமின்றி…

மேலும்...

சட்டத்தை மதித்து நடந்த சென்னை பேரணி – தேசிய கீதத்துடன் நிறைவு!

சென்னை (19 பிப் 2020): சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டை சென்னை ஷஹீன் பாக்காக மாறி இங்கு 6- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கலைவாணர்…

மேலும்...

சென்னை சிஏஏ பேரணி நிறைவு!

சென்னை (19 பிப் 2020): சென்னையில் ஜமாத்துல் உலமா சபை தலைமையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நிறைவு பெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டை சென்னை ஷஹீன் பாக்காக மாறி  இங்கு 6- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…

மேலும்...

முஸ்லிம்களின் போராட்டம் எதிரொலி – எடப்பாடி திடீர் அறிவிப்பு!

சென்னை (19 பிப் 2020): சென்னை மற்றும் தமிழகமெங்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய கூட்டமைப்பு போராட்டம் நடத்துகின்றன. இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அடையாள அட்டை , தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டபடி இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை திடீரென அறிவித்தார். அதன்படி சென்னையில் ரூ.15…

மேலும்...

சென்னை சட்டமன்ற முற்றுகை நேரலை (LIVE VIDEO)

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சென்னை – சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிலிருந்து புறப்பட்டு பேரணியாகச் சென்று சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதன் நேரலைக் காட்சிகள்

மேலும்...

சென்னை ஷஹீன் பாக்: தொடரும் 6 வது நாள் போராட்டம்!

சென்னை (19 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் போராட்டம் தொடர்ந்து 6 வது நாளாக தொடர்கிறது. டெல்லி ஷஹீன் பாக் மாடலாக சென்னையிலும் 6-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு அவ்வப்போது உணவு, குடிநீர், சர்பத், பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை போராட்டக்குழுவினர் வழங்கி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுவோரை…

மேலும்...

திருச்சி CAA எதிர்ப்பு பேரணிக்கு முஸ்லிம் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை – திருமாவளவன் அறிவிப்பு!

திருச்சி (19 பிப் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி தேசம் காப்போம் பேரணி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு போலீஸ் அனுமதி கிடைக்காத நிலையில் தற்போது அனுமதி கிடைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த பேரணி பிற்பகல் 2 மணிக்கு மாற்றப்படுள்ளதாக தெரிவித்த திருமாவளவன், இப்பேரணியில் பங்கேற்க தோழமை கட்சிகளுக்கோ, இஸ்லாமிய அமைப்புகளுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் முழுமையக விடுதலை சிறுத்தைகள்…

மேலும்...

திட்டமிட்டபடி நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் – இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு!

சென்னை (18 பிப் 2020): திட்டமிட்டபடி சிஏஏவுக்கு எதிரான சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நாளை (பிப் 19) நடைபெறும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜா முகைதீன் தெரிவித்துள்ளார். சிஏஏ சட்டத்தை எதிர்த்து நாளை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடுவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தன. ஆனால். இந்த போராட்டங்களுக்கு…

மேலும்...