சிஏஏ போராட்டத்தில் போலீஸாரால் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்குப்பதிவு!

மீரட் (17 பிப் 2020): உத்திர பிரதேசம் மீரட்டில் சிஏஏ போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில், கடந்த டிசம்பர் 20ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. 13 மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்தபின், தடையை மீறி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலிஸார் கற்களை வீசியும், தடியடி நடத்தியும்…

மேலும்...

ஆண்டுவிழா நாடகம் போட்ட பள்ளிக்கூடம் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது!

பெங்களூரு (29 ஜன 2020): பள்ளி ஆண்டு விழாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நகைச்சுவை நாடகம் போட்ட பள்ளி நிர்வாகம் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஷஹீன் பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற ஆண்டுவிழாவின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சியாக 4 ஆம் வகுப்பு மாணவர்கள் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். அந்த நாடகத்தில் குடியுரிமை சட்டத்தை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசின் சட்டத்தை அவமதிக்கும் விதமாக இருப்பதாக…

மேலும்...

ரஜினிக்கு எதிரான வழக்கு வாபஸ்!

சென்னை (28 ஜன 2020): நடிகர் ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றுள்ளது. நடிகர் ரஜினி சரியாக வருமான வரி கட்டவில்லை என கடந்த 2014 ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் 50லட்சத்துக்கும் குறைவான அபராதங்களில் வழக்கு தொடரக்கூடாது என்ற வரம்பை ஒரு கோடியாக உயர்த்தி மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் முடிவெடுத்துள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதாக…

மேலும்...

ரூபாய் 100 கோடி மான நஷ்ட வழக்கு – அசாருதீன் எச்சரிக்கை (VIDEO)

மும்பை (23 ஜன 2020): தன் மீது பதியப்பட்ட வழக்கிற்கான மான நஷ்ட ஈடாக, ரூ. 100 கோடி கேட்டு வழக்கு தொடர்வேன் என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் முஹம்மது அசாருத்தீன் தெரிவித்துள்ளார். மகாரஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் அசாருதீன் மற்றும் இருவர் ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக, டிராவல் உரிமையாளர் ஒருவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை மறுத்துள்ள அசாருத்தீன் இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது:…

மேலும்...