பயங்கரவாதியின் துப்பாக்கிச்சூட்டை அடுத்து மீண்டும் போராட்டத்தால் திணறும் டெல்லி!

புதுடெல்லி (30 ஜன 2020): டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது கோபால் என்ற பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல ஷஹீன் பாக்கிலும் பெண்கள் அதிக அளவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள்…

மேலும்...

டெல்லியில் பரபரப்பு – மாணவர்களை நோக்கி சுட்ட பயங்கரவாதி!

புதுடெல்லி (30 ஜன 2020): டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த பயங்கரவாதி மாணவர்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளான். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக ஜாமியா பல்கலைக் கழகத்திற்கு அருகேயுள்ள ஷாஹீன் பாக்கில் ஆயிரக்கணக்காண பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஜாமியா மில்லியாவில் இருந்து மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்திருக்கும் ராஜ்காட்டிற்கு பேரணியாக செல்வதற்கு அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ராஜ்காட்டிற்கு அமைதியான முறையில் பேரணி…

மேலும்...

டாக்டர் கபீல்கான் மீண்டும் கைது!

மும்பை (30 ஜன 2020): டாக்டர் கபீல்கான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் அலிகார் பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதாகவும், மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும் அவர் மீது சென்ற மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு, கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் பல குழந்தைகள் பலியான நிலையில் ஆக்சிஜனுக்கு தன் சொந்த பணத்தில் உதவி புரிந்தபோதும் அவர் மீது வழக்கு…

மேலும்...

சிஏஏ போராட்டம் – பெண்களை குறி வைக்கும் அரசு!

காஞ்சிபுரம் (29 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலப் போராட்டம் நடத்திய பெண்கள் கைது செய்யப் பட்ட நிலையில் தற்போது சுவரில் ஓவியம் வரைந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகின்றன. இந்தப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்தாலும், கோலம் போட்டு…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் பரபரப்பு – துப்பாக்கியுடன் நுழைந்த நபர்: வீடியோ!

புதுடெல்லி (29 ஜன 2020): டெல்லி ஷஹீன் பாக் போரட்டக் களத்தில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த நினைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக…

மேலும்...

பாப்புலர் ஃப்ரெண்ட் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது – பாப்புலர் ஃப்ரண்ட் அறிக்கை!

புதுடெல்லி (28 ஜன 2020): CAA எதிர்ப்பு போராட்டங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் நிதி உதவி என்ற குற்றச்சாட்டுகள் போலியானது! ஆதாரமற்றது என்று பாபுலர் ஃப்ரெண்ட் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தேசிய பொதுச் செயலாளர் எம். முஹம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: CAA போராட்டத்தை தூண்டுவதற்கு பாப்புலர் ஃப்ரண்டின் நிதி உதவி என பல்வேறு செய்தி சேனல்களில் வெளியிடப்படும் செய்தி அறிக்கைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முற்றிலும் மறுப்பதுடன் வன்மையாக கண்டிக்கவும் செய்கின்றது. முதலில்,…

மேலும்...

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் வெளியேற்றம்!

ஐதராபாத் (27 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட இருந்த பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், நேற்று மாலை ஹைதராபாத் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டார். அதனைத் தொடர்ந்து, அவர் இன்று காலை டெல்லிக்கு அனுப்பி வைக்கப் படுவதாகவும், தனது ஆதரவாளர்களை போலீசார் தாக்கியதாகவும் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சந்திரசேகர் ஆசாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது: “தெலுங்கானாவில் சர்வாதிகாரம் அதன் உச்சத்தில் உள்ளது. முதலில் எனது ஆதரவாளர்கள்…

மேலும்...

நள்ளிரவில் பரபரப்பு – சென்னை சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையம் முற்றுகை!

சென்னை (27 ஜன 2020): சென்னை சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையம் நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ரிச்சி தெருவில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேனா விநியோகிக்கப் பட்டதில் அதனை தடுத்தது காரணமாக 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப் பேட்டையில் நடைபெற்ற போராட்டத்திலும் சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி சென்னை சிந்தாதிரிப் பேட்டை காவல்…

மேலும்...

போராட்டக் களத்தில் கொண்டாடப் பட்ட குடியரசு தினம் – மக்கள் வெள்ளம் (வீடியோ)

புதுடெல்லி (27 ஜன 2020): டெல்லி ஷஹீன் பாக்கில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டம் 40 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. பொது மக்கள் போராட்டக் களத்தில் தொடர்ந்து போராடி வரும் நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தில் காலை பல லட்சக் கணக்கானோர் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடிக்கு உரிய மரியாதையுடன் பல லட்சம் மக்கள் நின்று மரியாதை செய்தது அனைவரையும் நெகிழச் செய்தது. அரசு ஷஹீன் பாக்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 70 லட்சம் பேர் பங்குபெற்ற மனித சங்கிலி!

திருவனந்தபுரம் (26 ஜன 2020): கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 620 கிலோ மீட்டர் தூரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறாது இந்த சட்டத்துக்கு எதிராகக் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, சட்டத்தை திரும்பப் பெறவலியுறுத்தியது. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் சிஏஏ சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் இன்று…

மேலும்...