ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்கவேண்டும் – திமுகவினர் ஆர்வம்!

சென்னை (15 அக் 2020): ரஜினி தேர்தலுக்கு முன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று திமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகிவிட்டன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. சசிகலா விடுதலையானால், என்ன நடக்கும் என்ற பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை தொடங்கி…

மேலும்...

நடிகை குஷ்பூ மீது மாற்றுத்திறனாளிகள் போலீசில் புகார்!

மதுரை (15 அக் 2020): நடிகை குஷ்பூ மீது மாற்றுத்திறனாளிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் தான் 6 ஆண்டுகள் இருந்ததாகவும், தனக்கு அங்கு மரியாதை தரப்படவில்லை என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியை…

மேலும்...

குஷ்பூ விலக காரணம் ஏன்? – பிரபல இயக்குனர் மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை (13 அக் 2020): காங்கிரஸிலிருந்து குஷ்பூ விலக குஷ்பூவின் கணவரம் இயக்குனருமான சுந்தர்.சி. யே காரணம் என்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. நடிகை குஷ்பூ காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் அவரது விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான கோபண்ணா, “குஷ்பு கொஞ்ச காலமாகவே கட்சியின் செயல்பாடுகளில் ஆர்வம் குறைந்து காணப்பட்டார்… ஷூட்டிங்கிலும் பிசியாக இருந்தார்… நாங்க அழைக்கும்போதுகூட, வெளிநாடுகளில் ஷூட்டிங்கில் இருப்பதாகவே தகவல்கள் வந்தன.. இப்போது சுந்தர்…

மேலும்...

நான் யாருன்னு 6 வருஷம் கழித்து தெரிந்துள்ளது – குஷ்பூ காட்டம்!

சென்னை (13 அக் 2020): நான் நடிகை என்பது 6 வருஷம் கழித்துதான் காங்கிரசுக்கு தெரிந்துள்ளது என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வில் சேர்ந்தபிறகு, டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நடிகை குஷ்புவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூக்களைத் தூவி குஷ்புவை வரவேற்ற பா.ஜ.க.வினர் ஆளுயர மாலையையும் அணிவித்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, “சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ். ஆறு வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்குத்…

மேலும்...

பாஜகவில் இணையும் நடிகை குஷ்பூ?

சென்னை (12 அக் 2020): காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பூ பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கடந்த சில தினங்களாக டுவிட்டரில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து பதிவிட்டும், உள்துறை மந்திரி அமித்ஷா, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவர் நலம் பெற வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இதன்பின்னர், அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும்…

மேலும்...

குஷ்பூவுக்கு காங்கிரசில் முக்கிய பதவி?

சென்னை (11 அக் 2020): குஷ்புவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குஷ்பூ காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல் வெளியானது. அதை குஷ்பு மறுத்தார். அதேவேளை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்தபோது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வடசென்னையில் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டார். இதற்கிடையே டெல்லி சென்ற குஷ்பு அங்கு…

மேலும்...

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பலியான பெண் மீது அவதூறு பரப்பும் பாஜகவினர்!

லக்னோ(08 அக் 2020):உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வந்த அப்பெண் பரிதாபமாக சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, ரவி, ராம்குமார், சந்தீப், லாவ் குஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் மீது…

மேலும்...

பாஜக தேசிய துணைத் தலைவராக அப்துல்லா குட்டி நியமனம்!

புதுடெல்லி (26 செப் 2020): பாஜக தேசிய துணைத் தலைவர்களில் ஒருவராக கேரளாவை சேர்ந்த அப்துல்லா குட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய அளவிலான புதிய பொறுப்புகளையும், அதற்கான நியமனப் பட்டியலையும் அறிவித்துள்ளது. பாஜக முதல் முறையாக 12 தேசிய துணைத் தலைவர்களை நியமித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. கட்சித் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா இந்த அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். பி.ஜே.பியின் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு நட்டா செய்துள்ள முதல் பெரிய மாற்றம் இது….

மேலும்...

விதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு!

சென்னை (20 செப் 2020): சென்னையில் விதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள் விவசாய அணி சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தமிழக விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுகணக்கான பாஜகவினர் அங்கு திரண்டிருந்தனர். இந்நிகழ்ச்சி நேரத்தில் வானில் பறக்கவிட கேஸ் பலூன் எனப்படும் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வைக்கப்பட்டிருந்தது….

மேலும்...

திமுகவுக்கு பாஜக திடீர் பாராட்டு – இதுதான் காரணமா?

சென்னை (10 செப் 2020): திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று திமுக சார்பில் நடத்தப்பட்ட வீடியோ கார்ஃபரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் 3000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். இது டெல்லி வட்டாரத்தை அசைத்துப்பார்த்துள்ளது. ஏனென்றால் தேசிய கட்சிகள் கூட இந்த அளவில் தொழில்நுட்ப பொதுக்குழுவை கூட்டியதில்லை. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் இந்த மீட்டிங் குறித்து தனது வியப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல்…

மேலும்...