காங்கிரஸ் எதிர் கட்சியாகத்தான் இருக்கும் – காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பகீர் கருத்து!

புதுடெல்லி (30 ஆக 2020): காங்கிரசுக்‍கு புதிய தலைவரை தேர்வு செய்யாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்‍கு எதிர்க்‍கட்சியாகத்தான் இருக்‍க வேண்டும் என அக்‍கட்சியின் மூத்த தலைவர் திரு. குலாம்நபி ஆசாத் கூறியுளளார். காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டால், தாம் பெரும் மகிழ்ச்சியடைவேன் என்றும், புதிய தலைவரை தேர்வு செய்யாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்‍கு எதிர்க்‍கட்சியாகத்தான் இருக்‍க வேண்டும் என்றும் திரு. குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். குலாம் நபி ஆசாத்தின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே…

மேலும்...
Sonia Rahul

தலைவரைத் தேர்ந்தெடுக்காமலேயே முடிவுற்றது காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம்!

(புது தில்லி ஆக. 24 2020:)கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியைத் தொடர்ந்து, தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. பின்னர் அக்கட்சியின் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார், சோனியா காந்தி அவர் பொறுப்பேற்றும் ஓராண்டு கடந்துவிட்டது. இதனால் தற்போது, கட்சிக்குத் யார் தலைவர் எனும் விவாதம் வலுப்பெற ஆரம்பித்தது. இற்கிடையே, கட்சித் தலைமையின் சீர்திருத்தங்கள் நாடி சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியதாக…

மேலும்...

நீட் தேர்வு – சுப்பிரமணியன் சாமி கருத்து!

புதுடெல்லி (23 ஆக 2020): நீட் தேர்வை தீபாவளிக்குப் பிறகு நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று . ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும் எனவும், நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி அன்றும் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது…

மேலும்...
Rahul and Modi

முதலில் பொய்க் குப்பைகளை சுத்தப்படுத்துங்கள்!-மோடி மீது ராகுல் காட்டம்

புதுதில்லி (12 ஆக 2020):குப்பைகள் இல்லா தேசம் என்ற பிரதமரின் சுதந்திர தினத் திட்டத்தை விமர்சித்துள்ள ராகுல் காந்தி முதலில் பொய் குப்பைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் பிரதேசத்தின் 74-ஆவது சுதந்தர தினம் நெருங்கி வரும் வேளையில், தற்போதைய நெருக்கடியான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பான முறையில் சுதந்தர தினத்தைக் கொண்டாட மிக நேர்தியான வகையில் ஏற்பாடுகள் செய்ய அந்தந்த மாநிய அரசுகள் முயன்று வருகின்றன. இதற்கிடையே…

மேலும்...

பாசிசவாதிகளின் பிடியில் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி தாக்கு!

புதுடெல்லி (14 ஜூலை 2020): இந்திய ஊடகங்கள் பாசிசவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அவரது தொடர் ட்விட்டர் பதிவுகள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசையும், இந்திய ஊடகங்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். “இந்திய ஊடகங்கள் பாசிசவாதிகளின் கையில் சிக்கி பொய்யான தகவல்களை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வெறுப்பு பிரச்சாரங்களே அதில் முக்கிய இடம் பெற்றுள்ளன. தொலைக்காட்சிகள், வாட்ஸ் அப்கள் என அனைத்திலும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன” என்று…

மேலும்...

சீன தூதுவருடன் ராகுல் காந்தி ரகசிய சந்திப்பு – பாஜக பகீர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (26 ஜூன் 2020): கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் காந்தி ரகசியமாக சந்தித்து பேசியதாக பாஜக, தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார் இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் முறையில் நட்டா பேசியதாவது: கடந்த 2017 ம் ஆண்டில், டோக்லாமில் இந்தியா – சீனா படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன. அப்போது, டெல்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் ரகசியமாக சந்தித்தார். மேலும் கடந்த 2005 – 06…

மேலும்...

மோடியை புகழும் சீனா – சந்தேகம் கிளப்பும் ராகுல் காந்தி!

புதுடெல்லி (22 ஜூன் 2020): இந்திய வீரர்களை கொலை செய்துவிட்டு, இந்திய இடத்தையும் கைபற்றிக் கொண்டு, இந்திய பிரதமரை சீனா பாராட்டியுள்ளது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் தயார் படுத்தப்பட்டுள்ள்ன. இந்நிலையில், இந்திய எல்லையில் யாரும் ஊடுருவவில்லை என பிரதமர் கூறியதற்கு சீன பத்திரிகை பாராட்டு தெரிவித்து இருந்தது. அதை மேற்கோள் காட்டியுள்ள…

மேலும்...

நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி – ராகுல் காந்தி தாக்கு!

புதுடெல்லி (21 ஜூன் 2020): “பிரதமர் நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல்…

மேலும்...

இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தாதீர் – பிரதமருக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

புதுடெல்லி (20 ஜூன் 2020): சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், “20 இந்திய வீரர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா-சீனா இடையே கிழக்‍கு லடாக்‍கின் கல்வான் பகுதியில் நடைபெற்ற மோதல் தொடர்பாக, மத்திய பா.ஜ.க. அரசு மீது திரு. ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீனா திட்டமிட்டே தாக்‍குதல்…

மேலும்...

இந்திய சீன எல்லையில் வீரர்கள் சாவு – பிரதமர் மவுனம் ஏன்?: ராகுல் காந்தி கேள்வி!

புதுடெல்லி (17 ஜூன் 2020): லடாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மே மாதம் இந்தியா-சீனா எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கு மோதல் ஏற்பட்டது. அதனை அடுத்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த…

மேலும்...