நள்ளிரவில் பரபரப்பு – சென்னை சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையம் முற்றுகை!

சென்னை (27 ஜன 2020): சென்னை சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையம் நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ரிச்சி தெருவில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேனா விநியோகிக்கப் பட்டதில் அதனை தடுத்தது காரணமாக 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப் பேட்டையில் நடைபெற்ற போராட்டத்திலும் சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி சென்னை சிந்தாதிரிப் பேட்டை காவல்…

மேலும்...

போராட்டக் களத்தில் கொண்டாடப் பட்ட குடியரசு தினம் – மக்கள் வெள்ளம் (வீடியோ)

புதுடெல்லி (27 ஜன 2020): டெல்லி ஷஹீன் பாக்கில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டம் 40 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. பொது மக்கள் போராட்டக் களத்தில் தொடர்ந்து போராடி வரும் நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தில் காலை பல லட்சக் கணக்கானோர் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடிக்கு உரிய மரியாதையுடன் பல லட்சம் மக்கள் நின்று மரியாதை செய்தது அனைவரையும் நெகிழச் செய்தது. அரசு ஷஹீன் பாக்…

மேலும்...

போலீசாரை ஏமாற்றிய இந்து ஜனநாயக அமைப்பினர்!

சென்னை (26 ஜன 2020): போராட்டத்திற்கு 200 பேர் வருவோம் என்று கூறிவிட்டு வெறும் 16 பேர் மட்டுமே வந்த இந்து ஜனநாயக அமைப்பினர் போலீசாரை தலையில் கை வைக்க வைத்துவிட்டனர். பெரியாருக்கு எதிராக ரஜினி கூறிய கருத்து பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில், திக தலைவர் கி.வீரமணி வீட்டை முற்றுகையிடப் போவதாக இந்து ஜனநாயக அமைப்பினர் அறிவித்திருந்தனர். மேலும் அந்த அமைப்பின் நிர்வாகி ஆனந்தன் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு 200 பேருக்கு மேல்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 70 லட்சம் பேர் பங்குபெற்ற மனித சங்கிலி!

திருவனந்தபுரம் (26 ஜன 2020): கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 620 கிலோ மீட்டர் தூரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறாது இந்த சட்டத்துக்கு எதிராகக் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, சட்டத்தை திரும்பப் பெறவலியுறுத்தியது. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் சிஏஏ சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் இன்று…

மேலும்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ரஜினியிடம் விசாரணை – பரபரப்பை கிளப்பும் விசாரணை அதிகாரி!

சென்னை (25 ஜன 2020): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினியிடம் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற விசாரணையை அடுத்து வழக்கறிஞர் வடிவேல் முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “18 ஆம் கட்ட விசாரணை கடந்த…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அகிலேஷ் யாதவின் மகள்!

லக்னோ (25 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மகளும் கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவித்தார். லக்னோ கடிகார கோபுரம் அருகில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் அகிலேஷ் யாதவின் மகள் டினா கலந்து கொண்டார். அவர் அவரது நண்பர்களுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஊடகங்களில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் திட்டமிட்டு…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சர்ச்சில் கிறிஸ்தவர்கள் போராட்டம்!

கோவா (25 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோவா சர்ச்சில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பலதரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களை குறி வைத்து இயற்றப் பட்டுள்ள இந்த சட்டத்திற்கு பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பாக கிறிஸ்தவர்களும் அடக்கம். கோவா கத்தோலிக் சர்ச்சில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. CAA, NRC மற்றும் NPR ஐ எதிர்த்து…

மேலும்...

சென்னையிலும் ஷஹீன் பாக் – பெண்கள் முன்னெடுத்த போராட்டம்!

சென்னை (24 ஜன 2020): சென்னையில் டெல்லி ஷஹீன் பாக்கைப் போன்று பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்…

மேலும்...

எம்பி ரவீந்திரநாத் கார் முற்றுகை – கம்பத்தில் பரபரப்பு!

கம்பம் (24 ஜன 2020): கம்பத்தில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் சென்ற கார் முற்றுகையிடப் பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கம்பத்தில் நகர அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா். பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வருகை தரும் தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்குமாா் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்ததற்காக, அவருக்கு கருப்புக் கொடி காட்டி எதிா்ப்புத் தெரிவிக்க முஸ்லிம் அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால், கம்பம்- கம்பம்மெட்டு சாலை சந்திப்பு, ஏ.எம்….

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் மோடியின் மனைவியா? -உண்மை என்ன?

புதுடெல்லி (22 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் பங்கேற்றதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. நாடெங்கும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுத்து வரும் நிலையில் சில பரபரப்பான செய்திகளுக்கும் பஞ்சமில்லை. அந்த வகையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் புகைப்படத்தில் பெண்கள் அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற…

மேலும்...