டெல்லியில் ஆம் ஆத்மி 50 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை!

புதுடெல்லி (11 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 51 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதில் ஆம் ஆத்மி 51 இடங்களிலும் பாஜக 19 இடங்களிலும் முன்னிலை…

மேலும்...

பாஜகவில் இணையும் நடிகர் விஜய் – கே.எஸ்.அழகிரி பரபரப்பு தகவல்

தர்மபுரி (09 பிப் 2020): நடிகர் விஜய் விரைவில் பாஜகவில் இணைவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பரபரப்பை கிளப்பியுள்ளார். நடிகர் விஜய் வீட்டில் கடந்த வாரம் திடீரென வருமானவரித் துறையினர் ரெய்டு செய்தனர் என்பதும், இரண்டு நாட்கள் அவருடைய வீட்டில் நடந்த ரெய்டில் எந்தவிதமான முறைகேடான பணமும் கைப்பற்றப் படவில்லை என வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டதும் தெரிந்ததே. இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு குறி வைத்தது போல் நடிகர் விஜய்க்கும் பாஜக குறி…

மேலும்...

தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் எழுப்பும் அரவிந்த் கெஜ்ரிவால்!

புதுடெல்லி (09 பிப் 2020): தேர்தல் ஆணையம் வாக்கு சதவீதத்தை அறிவிக்காததற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நேற்று (பிப்.,08) நடந்தது. இந்த தேர்தல்லின் முழு வாக்கு சதவீதத்தையும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இது குறித்து டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடியுள்ளார். தேர்தல் ஆணையம் என்ன தான் செய்து…

மேலும்...

பாஜகவில் சேர்ந்த வேகத்தில் பாஜகவை எதிர்த்த திரை பிரபலம்!

சென்னை (09 பிப் 2020): நடிகர் விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராடுவதற்கு பாஜகவில் சமீபத்தில் இணைந்துள்ள இயக்குநர் பேரரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதால் நடிகர் விஜய் தேசிய அளவில் பேசுபொருளானார். ஒரு வழியாக வருமான வரித்துறை சோதனை முடிந்து மாஸ்டர் படப்பிடிப்பு மீண்டும் நெய்வேலியில் தொடங்கி இருக்கிறது. ஆனால், பாஜக விடுவது போல் இல்லை. என்எல்சி பகுதிக்கே சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ரசிகர்களும் குவிய.. கடைசியில் அந்த…

மேலும்...

டெல்லி தேர்தல் கருத்துக் கணிப்புகள் உண்மையா? – அமித்ஷா வேறு வகை பதில்!

புதுடெல்லி (09 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியே வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா அதனை மறுத்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆத்மி கட்சி 56 இடங்கள் வரை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்பட்டது. கருத்து கணிப்புக்கள் வெளியிடப்பட்ட பிறகு பாஜக நாடாளுமன்ற., குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் ஆகியோருடன் அமித்ஷா, மீனாட்சி லேகி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்….

மேலும்...

டெல்லி தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களித்த கட்சி ஆம் ஆத்மி!

புதுடெல்லி (09 பிப் 2020): நேற்று நடைபெற்ற டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கே முஸ்லிம்கள் அதிக சதவீதத்தில் வாக்களித்துள்ளனர். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தம் உள்ள 70 இடங்களில் அக்கட்சிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டைம்ஸ் நவ் 44 இடங்கள் ஆம் ஆத்மிக்கும், 26 இடங்கள் பாஜகவுக்கும் கிடைக்கும் என்றும், நியூஸ் எக்ஸ் ஆம் ஆத்மிக்கு 53…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் கட்சியிலிருந்து விலகல்!

போபால் (08 பிப் 2020): குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேச பாஜக தலைவர்களில் ஒருவரான உஸ்மான் பட்டேல் கட்சியிலிருந்து விலகியுள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. டெல்லி ஷஹீன் பாக்கில் பெண்கள் கடுங் குளிரிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தூரில் பாஜக கவுன்சிலர் ஒருவர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கஜ்ரானா வட்டாரத்தை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர். படேல். மேலும்…

மேலும்...

மாநிலங்களவையை கிடுகிடுக்க வைத்த விப்லவ் தாக்கூர்!

புதுடெல்லி (08 பிப் 2020): விப்லவ் தாக்கூர் இவர்தான் இன்று இணையஙகளை கலக்கிக் கொண்டிருப்பவர். 76 வயதான இந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர். 1943 அக்டோபர் மாதம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் பிறந்தார். அரசியலில் முதுகலை வரை படித்துள்ளார். இவரது பெற்றோர் சுதந்திரப் போராட்ட வீரர்கள். 1985 முதல் இமாச்சல் மாநில அளவிலும், மத்திய அளவிலும் பல முக்கிய பதவிகளை இவர் வகித்து வந்திருக்கிறார். இவர் மாநிலங்களவை பேசிய அனல் கக்கும்…

மேலும்...

முஸ்லிம்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் – பாஜக எச்சரிக்கை!

புதுடெல்லி (08 பிப் 2020): முஸ்லிம்கள் அவர்களது ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்நாடக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் முஸ்லிம் பெண்கள் கையில் வாக்காளர் அட்டையுடன் நிற்கும் வீடியோவை பதிவிட்டு, ‘நீங்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் இது மீண்டும் தேவைப்படும்’ என்பதாக வெறுப்பூட்டும் பதிவை கர்நாடக பாஜக வெளியிட்டுள்ளது. நாடெங்கும் சிஏஏ, என்ஆர்சி, என்ஆர்பி ஆகியவற்றிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்…

மேலும்...

டெல்லியில் பாஜகவுக்கு பலத்த அடி – கருத்துக் கணிப்பு தகவல்

புதுடெல்லி (08 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தம் உள்ள 70 இடங்களில் அக்கட்சிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டைம்ஸ் நவ் 44 இடங்கள் ஆம் ஆத்மிக்கும், 26 இடங்கள் பாஜகவுக்கும் கிடைக்கும் என்றும், நியூஸ் எக்ஸ் ஆம் ஆத்மிக்கு 53 – 57 வரையிலும், பாஜகவுக்கு 11 – 17 இடங்கள் வரையிலும் கிடைக்கும்…

மேலும்...