கத்தாரின் தலைநகரம் தோஹா (இந்நேரம்.காம்)

உலகின் அதிவேக இண்டெர்நெட் சேவையில் கத்தார் முதலிடம்!

கத்தார் (11 ஜன 2023): உலகின் அதிவேக மொபைல் இண்டர்நெட் சேவை வழங்குவதில் உலகிலேயே முதல் இடத்தை (தோஹா) கத்தார் நாடு பெற்றுள்ளது. உலகக் கால்பந்தாட்டப் போட்டி நடத்தி சர்வதேச அளவில் அனைவரையும் வாய் பிளக்க வைத்திருக்கும் கத்தார், சாதனைகளை தொடர்ந்து படைத்த வண்ணம் இருக்கிறது.  குறிப்பாக உலகத் தரத்திலான சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் முன்னணி வகிக்கிறது. கத்தாரில் Ooredoo மற்றும் Vodafone ஆகிய இரு பெரும் நிறுவனங்கள் இணையச் சேவையை வழங்கி வருகின்றன. நடைபெற்று முடிந்த கால்பந்தாட்டப்போட்டிகளுக்கு…

மேலும்...

கத்தாரில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்ட டாக்டர்.ஜாகிர் நாயக் நிகழ்ச்சிகள்!

தோஹா (09 டிசம்பர் 2022): பிரபல இஸ்லாமிய மதபோதகர் டாக்டர். ஜாகிர் நாயக், FIFA World Cup 2022 நடந்து வரும் கத்தாருக்குச் சென்றுள்ளார். அங்கே அவரது தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் பொதுக்கூட்டங்களும் நடந்து வருகின்றன. கத்தாரில் நடக்கும் சர்வதேச உலகக் கால்பந்தாட்ட போட்டியைக் காண, லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இன்று (09 டிசம்பர் 2022, வெள்ளிக்கிழமை) கத்தார் நாட்டில் உள்ள அல் வக்ரா வில் உள்ள பிரபலமான பள்ளிக்கூடமான தி…

மேலும்...

கத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன?

தோஹா (28 அக் 2020): பெண்களிடம் பரிசோதனை செய்தமைக்காக கத்தார் ஏர்வேஸ் விமானம் மன்னிப்பு கோரோப்பியது. கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு கடந்த 2 ஆம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம் புறப்பட இருந்தது. விமான நிலையத்தில் குளியலறையில், அடையாளம் தெரியாத குறைமாதத்தில் பிறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் தாயை உடனடியாகக் கண்டுபிடிப்பதற்காக, விமான நிலையத்தில் வெளிநாடு செல்லத் தயாராக இருந்த பெண் பயணிகளுக்கு கட்டாய மருத்துவப் பரிசோதனை செய்து, யாருக்கேனும்…

மேலும்...

கோவிட் தடுப்பூசி அனைவருக்கும் இலவசம்! கத்தார் அரசு அதிரடி அறிவிப்பு

தோஹா (06 நவம்பர் 2020): கொரோனா வைரஸுக்கான நிவாரண தடுப்பூசி, கத்தார் நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் முற்றிலும் இலவசம் என்று கத்தார் அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. கத்தார் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் (Ministry of Public Health) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இச் செய்தி இடம் பெற்றுள்ளது. கோவிட்-19 தடுப்பூசிகளுக்காக புகழ் பெற்ற Pfizer மற்றும் BioNTech நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது கத்தார். Pfizer நிறுவனம் நடத்திவரும் தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகள், இம்மாத இறுதியில்…

மேலும்...

கத்தாரில் அனைத்து மசூதிகளும் காலவரையறை இன்றி மூடப்பட்டன!

தோஹா (17 மார்ச் 2020): வளைகுடா நாடுகளில் பிரபலமான கத்தார் நாட்டில் அனைத்து மசூதிகளும் இன்று முதல் காலவரையறை இன்றி மூடப்படுகின்றன. தினசரி முஸ்லிம்கள் தொழும் ஐவேளை தொழுகைகள் மட்டுமன்றி, வெள்ளிக் கிழமைக்கான சிறப்புத் தொழுகையும் நிறுத்தப்பட்டது. இதனை அரசு தரப்பில் AWQAF  சற்றுமுன் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (COVID-19) தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கத்தார் நாடு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி இருப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதால், மக்கள் கூட்டம்…

மேலும்...

தோஹா-திருச்சி நேரடி விமானச்சேவை – பயணிகள் மகிழ்ச்சி!

தோஹா (12 பிப்ரவரி 2020): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவிலிருந்து திருச்சிக்கு நேரடி விமானச் சேவையின்றி இதுநாள் வரை பெரும் அவதியில் இருந்த பயணிகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பட்ஜெட் விமானம், தோஹா-திருச்சி வழித்தடத்தில் தனது புதிய சேவையைத் துவக்கி இருக்கிறது. தோஹாவிலிருந்து திருச்சிக்கு நேரடி விமானச் சேவை இல்லாத காரணத்தால் திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தனர். இவர்கள் முறையே, தோஹா – சென்னை,…

மேலும்...

மிதக்கும் ஹோட்டல்கள்: புதுமை படைக்கிறது கத்தார்!

கத்தார் (20 ஜன 2020): புதுப்புது திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் முன்னணி நாடாகத் திகழும் (தோஹா) கத்தாரில், மிதக்கும் ஹோட்டல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் சர்வதேச 2022 FIFA விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, பல்வேறு கட்டுமானப் பணிகளையும் புதிய விரிவாக்கப் பணிகளையும் நாடு முழுக்க துரிதமாகச் செய்து வருகிறது கத்தார். அதன் ஒரு அங்கமாக, கத்தாரின் கெடைஃபேன் தீவில் 1,616 அறைகளைக் கொண்ட பிரம்மாணமான மிதக்கும் ஹோட்டல்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. கத்தாரா நிறுவனம் இதற்கான உரிமையைப்…

மேலும்...