தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்வு!

சென்னை (31 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணைக்கை 124 ஆகா உயந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், “சென்னையில் மேலும் 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 45 பேர் தில்லி…

மேலும்...

கொரோனாவால் தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேர் பாதிப்பு!

சென்னை (30 மார்ச் 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று வரை தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் இது 67 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் இன்று உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன்…

மேலும்...

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை!

சென்னை (30 மார்ச் 2020): தமிழகத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய பொருட்கள் தடைபட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை தற்போது 20 முதல்…

மேலும்...

தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

சென்னை (29 மார்ச் 2020): தமிழகத்தில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் 8 பேரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதில், 10 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா…

மேலும்...

ஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக உலா வரும் நாகை மக்கள்!

நாகை (28 மார்ச் 2020): கொரோனா உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்க நாகை மக்களுக்கு மட்டும் அதுகுறித்த அச்சமோ, கவலையோ இருப்பதாக தெரியவில்லை. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 27,674 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 933 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 20 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது….

மேலும்...

தமிழக நோயாளிக்கு தண்டு உயிரணுக்களை (Stem Cells) தானமாக வழங்கும் கேரள மாணவி!

சென்னை (27 மார்ச் 2020): தமிழக நோயாளிக்கு தண்டு உயிரணுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளார் கேரள மாணவி ஹிபா ஷமார். சென்னை மருத்துவமனையில் தண்டு உயிரணுக்கள் (Stem Cells) பற்றாக்குறையால் உயிருக்கு போராடி வரும் நோயாளி ஒருவருக்கு கேரளாவை சேர்ந்த 18 வயது மாணவி ஹிபா என்பவர் தனது தண்டு உயிரணுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளார். ஹிபா கேரள மாநிலம் எர்ணாகுளம் தெரஸா கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். ஷமார், ஜீனத் தம்பதிகளின் மகளான…

மேலும்...

மக்களின் வேதனையை பயன்படுத்தி காசு சம்பாதிக்கும் காய்கறி வியாபாரிகள்!

சென்னை (26 மார்ச் 2020): நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமத்தில் உள்ள நேரத்தில் காய்கறிகளின் விலையை இரட்டிப்பாக்கி காசு பார்க்கின்றனர். காய்கறி வியாபாரிகள். கொரோனா கிருமி தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் மற்ற கறிகளை விட காய்கறிகளையே அதிகம் விரும்புகின்றனர். தேவை அதி­க­ரித்­ததை அடுத்து கோயம்­பேடு காய்­க­றிச் சந்­தை­யில் கத்­தி­ரிக்­காய், உருளை உள்­ளிட்ட காய்­க­றி­க­ளின் விலை அதி­க­ரித்­தது. கடந்த இரு தினங்­க­ளுக்கு…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

சென்னை (25 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் மேலும் புதியதாக 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக வந்த சென்னையைச் சேர்ந்தவர். இவர்கள் 22-ம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு சேலம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிச்சை அளிக்கப்பட்டு…

மேலும்...

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை முழு தேர்ச்சி! – முதல்வர் உத்தரவு!

சென்னை (25 மார்ச் 2020): தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் முழு தேர்ச்சி அடைவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பிற்கு அனைத்துத் தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மற்ற வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் 1 ஆம் வகுப்பு முதல்…

மேலும்...

கொரோனா வைரஸுக்கு தமிழகத்தில் முதல் மரணம்!

மதுரை (25 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சுட்டுரைப் பக்கத்தில் உறுதிபடுத்தினார். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் சென்று வராமல் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர் ஆவார். இவருக்கு நீரிழிவு,…

மேலும்...