பாஜக வேட்பாளரை வீழ்த்தி மேயர் ஆனார் முஸ்லிம் பெண் வேட்பாளர் தஸ்னீம்!

மைசூரு (19 ஜன 2020): மைசூரு மேயர் பதவிக்கான தேர்தலில் முஸ்லிம் பெண் வேட்பாளர் தஸ்னீம் வெற்றி பெற்று மைசூரு மேயர் ஆனார். மைசூரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையும் தஸ்னீமுக்கு கிடைத்துள்ளது. மேயர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் தஸ்னீம் போட்டியிட்டார். பாஜக சார்பில் கீதாஸ்ரீ யோகானந்த் போட்டியிட்டார். கீதாவை வீழ்த்தி தஸ்னீம் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து 31 வயதான பெண் மேயர் தஸ்லீம் மைசூரின் 33-வது மேயராக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

நிதிஷ் குமாருடன் கூட்டணி தொடருமா? – அமித் ஷா பதில்!

பாட்னா (16 ஜன 2020): பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து தேர்தலை பாஜக சந்திக்கும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் வைஷாலியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- “குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது. குடியுரிமை திருத்த சட்டத்தினால்…

மேலும்...