ஐக்கிய அரபு அமீரகத்தில் மஞ்சள் எச்சரிக்கை!

துபாய் (02 ஜன 2023): ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்று பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேசிய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அபுதாபி காவல்துறை, வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், பல்வேறு சாலைகளில் மங்களாக காணப்படும் என்பதால் வேக வரம்புகளில் மாற்றங்களைக் கவனிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மலைப்பகுதிகளில் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. அபுதாபியில் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை!

துபாய் (28 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நேரத்தில் வெளியே செல்லும் போதும் வாகனம் ஓட்டும் போதும் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஷார்ஜா அஜ்மான் ராஸ் அல் கைமாவில் காலை முதல் பலத்த மழை பெய்து…

மேலும்...

பிரசவ வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட மருத்துவர் மீது வழக்குப் பதிவு!

துபாய் (25 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரசவ அறுவை சிகிச்சையின் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட மருத்துவர் மீது இளம் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பெண் ஒருவர், அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் பிறப்பு வீடியோவை வெளியிட்டதற்காக 50,000 திர்ஹாம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த பெண் மருத்துவமனை மீதும், வீடியோ பதிவு செய்த மருத்துவர் மீதும் புகார் கூறி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். பிரசவத்தின்போது தன் அனுமதியைக் கூட…

மேலும்...

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் உலகில் துபாய் இரண்டாமிடம்!

துபாய் (17 டிச 2022): சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் உலகில் துபாய் இரண்டாவது இடத்தில் உள்ளது. uromonitor International இன் 2022 ஆம் ஆண்டின் சிறந்த 100 சுற்றுலா நகரங்களின் பட்டியலில் பாரிஸ் முதலிடத்திலும், துபாய் இரண்டாமிடத்திலும் உள்ளது. முதல் பத்து பட்டியலில் உள்ள மற்ற நகரங்கள் ஆம்ஸ்டர்டாம், மாட்ரிட், ரோம், லண்டன், முனிச், பெர்லின், பார்சிலோனா மற்றும் நியூயார்க். அதேவேளை சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான நகரமாக துபாய் முதலிடத்தில் உள்ளது. நிதித்துறை, வணிகத்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமல்!

துபாய் (16 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டம் 18 வயதுக்குட்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்வது உட்பட பல விதிகளைக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மனிதவள அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் புதிய சட்டத்தை அறிவித்தது. புதிய சட்டத்தின்படி…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் விசாவில் இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

துபாய் (14 டிச 2022): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசிட் விசாவில் இருப்பவர்கள் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்க நாட்டை விட்டு வெளியேறி பின்னரே விசாவை புதுப்பிக்க வேண்டும்; இந்த நடைமுறை ஷார்ஜா மற்றும் அபுதாபி எமிரேட்டுகளுக்கு பொருந்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசிட்விசாவில் இருப்பவர்களுக்கு நாட்டிற்குள்ளிருந்து விசாவை மாற்றும் வசதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஷார்ஜா மற்றும் அபுதாபி எமிரேட்டுகளில் அமலுக்கு வந்தது. ஆனால் துபாயில் தற்போதைய நிலையே தொடரும். புதிய முடிவின் மூலம், உங்கள்…

மேலும்...

மோசமான வானிலை – அபுதாபி போலீஸ் எச்சரிக்கை!

அபுதாபி (10 டிச 2022): மோசமான வானிலை காரணமாக வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அபுதாபியில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து அபாயம் உள்ளதால், வாகனங்களின் வேகத்தை குறைக்குமாறு, பயணிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர். ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த வார இறுதிக்குள் மழையின் தீவிரம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்...

சக ஊழியரை மிரட்டிய மேலாளருக்கு அபராதம் விதித்த துபாய் நீதிமன்றம்!

துபாய் (07 டிச 2022): சக ஊழியரை மிரட்டியதற்காக மருந்தக மேலாளருக்கு ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம் அபராதம் விதித்தது. மருந்தக மேலாளருக்கும், சக ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னையால், சக ஊழியரையும், அவரது மகனையும் கொன்றுவிடுவதாக மேலாளர் மிரட்டியுள்ளார். இதனால் குற்றவியல் நீதிமன்றத்தால் 10000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலாளர் தன்னையும் தனது எட்டு வயது மகனையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் இந்த…

மேலும்...

துபாய் ஷாப்பிங் திருவிழா டிசம்பர் 15 ல் தொடக்கம்!

துபாய் (06 டிச 2022): துபாய் ஷாப்பிங் திருவிழா இம்மாதம் 15ம் தேதி தொடங்குகிறது. ஷாப்பிங் திருவிழாவை ஒட்டி, இம்முறையும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன துபாய் ஷாப்பிங் திருவிழா ஜனவரி 15 முதல் ஜனவரி 29 வரை நடைபெறுகிறது. இதில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இம்முறை மெகா ரேஃபிள் டிரா மூலம் நிசான் பேட்ரோல் கார் மற்றும் 100,000 Dhs ஒவ்வொரு நாளும் வெல்லும் வாய்ப்பு உள்ளது….

மேலும்...

ஷார்ஜாவில் இலவச பார்க்கிங் வசதிகள் மூடல்!

ஷார்ஜா (06 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் பல இடங்களில் கட்டணம் செலுத்தி பார்க்கிங் இருந்தாலும், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள காலி இடங்களில் இலவசமாக நிறுத்தலாம். இந்த இடங்களை அதிகாரிகள் ஒவ்வொன்றாக மூடி வருகின்றனர். எமிரேட்டின் அழகு மற்றும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு அதிக வாகன நிறுத்துமிடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது, ​​ஷார்ஜாவில் சுமார் 57,000 பொது வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. இவை முறைகேடாக பயன்படுத்தப்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து…

மேலும்...