டெல்லி இனப்படுகொலை நடந்த பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார்!

புதுடெல்லி (04 மார்ச் 2020): டெல்லியில் இனப்படுகொலை செய்யப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் கடசியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார். டெல்லி இனபப்டுகொலைப் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் கடந்த 3 நாட்களாக அவை முடங்கியுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு டெல்லியின் பிரிஜ்புரி பகுதியில் வன்முறையால் சேதமடைந்த இடங்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் அடங்கிய…

மேலும்...

கோமாளி விளையாட்டு விளையாட வேண்டாம் – மோடியை சாடிய ராகுல் காந்தி!

பதுடெல்லி (04 மார்ச் 2020): கோமாளி போல் விளையாடி இந்தியர்களின் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று ராகுல் காந்தி மோடிக்கு ட்வீட் செய்துள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதை பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிற்கு டேக் செய்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “உங்களது சமூக ஊடகக் கணக்குகளை வைத்துக் கொண்டு கோமாளி போல் விளையாடி இந்தியாவின் நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்தியா நெருக்கடியான ஒரு சூழலை…

மேலும்...

வெறுப்பைதான் நீங்கள் கைவிட வேண்டும் சமூக வலைதளங்களை அல்ல – மோடிக்கு ராகுல் அட்வைஸ்!

புதுடெல்லி (03 மார்ச் 2020): சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற எண்ணுவதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவுரை வழங்கியுள்ளார். நேற்று திடீரென ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, “இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் ஆகிய சமூக வலைதளக் கணக்குகளை விட்டு நீங்கிவிடலாம் என்று யோசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதேவேளை “நான் எதுவும் பதிவிட மாட்டேன், உங்களைப் பதிவிட வைப்பேன்” என்றும் கூறியுள்ளார். மோடியின் இந்த அறிவிப்பை…

மேலும்...

டெல்லி கலவரம் – சோனியா காந்தி, ராகுல் காந்தி கவலை!

புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லி கலவரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கவலை தெரிவித்துள்ளனர். டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. ஞாயிறன்று…

மேலும்...

பிரதமர் என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார் – மோடிக்கு ராகுல் பதிலடி!

புதுடெல்லி (07 பிப் 2020): ஒரு பிரதமர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நமது பிரதமருக்கு தெரியவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியை மறைமுகமாக டியூப் லைட் என்று விமரிசித்திருந்தார். இது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு ராகுல் காந்தி தெரிவித்ததாவது: பொதுவாகவே பிரதமர் என்றால் அவர்களுக்கு என ஒரு தனி அந்தஸ்து இருக்கும். பிரதமர் என்றால் அவர்கள் நடந்து…

மேலும்...

கோட்சேவும் மோடியும் ஒரே எண்ணம் கொண்டவர்கள் – ராகுல் காந்தி தாக்கு!

வயநாடு (30 ஜன 2020): பிரதமர் நரேந்திர மோடியும் நாதுராம் கோட்சேவும் ஒரே எண்ணம் கொண்டவர்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் நாடளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி தனது மக்களவைத் தொகுதியான கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள கல்பேட்டாவில் ‘அரசியலமைப்பைச் பாதுகாப்போம்’ என்னும் குடியுரிமை மற்றும் மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிரான பேரணி அணிவகுப்புக்கு தலைமை தாங்கினார். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கான தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினார்….

மேலும்...

பொருளாதாரம் குறித்து தெரிந்தால்தானே அதைப்பற்றி சிந்திக்க முடியும் – மோடி மீது ராகுல் பாய்ச்சல்!

ஜெய்ப்பூர் (29 ஜன 2020): பொருளாதாரம் குறித்த புரிதல் பிரதமருக்கு இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யுவ ஆக்ரோஷ் எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பின்பற்றப்பட்ட பொருளாதார மதிப்பீடுகள் மீது கணக்கிட்டால் இப்போதுள்ள பொருளாதார வளர்ச்சி…

மேலும்...

அமித் ஷா உள்ளிட்ட எம்பிக்களின் சொத்து விவரம் எங்கே? – தகவல்அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி!

புதுடெல்லி (24 ஜன 2020): உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 503 எம்பிக்கள் இதுவரை சொத்து விவபரங்களை தாக்கல் செய்யவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், 90 நாட்களுக்குள் தங்களது பெயரில் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்து, வாழ்க்கைத்துணையின் சொத்து விவரங்கள், தங்களுடன் இருக்கும் பிள்ளைகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால் 2019ம் ஆண்டு…

மேலும்...

மாணவர்களை நேரடியாக சந்திக்க தைரியம் உண்டா? – மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

புதுடெல்லி (13 ஜன 2020): மாணவர்களை சந்திக்க மோடி பயப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட 20 கட்சிகளை சேர்ந்த…

மேலும்...