எல்லாவற்றையும் மூடி மறைக்க பார்க்கிறது பாஜக – சுப்ரியா சுலே குற்றச்சாட்டு!

மும்பை (19 ஜன 2020): குடியுரிமை சட்ட விவகாரத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட விவகாரங்களை பாஜக மூடி மறைக்கப் பார்க்கிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்தார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடிற்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினர். இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…

மேலும்...

தமிழக பாஜக தலைவராகும் எச்.ராஜா?

சென்னை (18 ஜன 2020): தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தமது தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா கவர்னரான பிறகு தமிழக பாஜக தலைவர் பதவிக்கு புதியவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. 11, 12 பேர் கொண்ட பட்டியல் டெல்லி மேலிடத்துக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பொன் ராதாகிருஷ்ணன்,…

மேலும்...

குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே – ஆர் எஸ் எஸ்ஸின் அடுத்த திட்டம்!

மொராதாபாத் (18 ஜன 2020): குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் திட்டத்திற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இல் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடியைக் கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தை வலியுறுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ், ‘இரண்டு குழந்தைகள்’ கொள்கை வடிவத்தில் கொண்டு வரும் எந்தவொரு சட்டத்தையும் ஆதரிக்கும். இது காலத்தின் தேவை என்று…

மேலும்...

நிதிஷ் குமாருடன் கூட்டணி தொடருமா? – அமித் ஷா பதில்!

பாட்னா (16 ஜன 2020): பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து தேர்தலை பாஜக சந்திக்கும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் வைஷாலியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- “குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது. குடியுரிமை திருத்த சட்டத்தினால்…

மேலும்...

கர்நாடக முதல்வர் எடியுரப்பாவுக்கு மிரட்டல் விடுத்த மடாதிபதி!

பெங்களூரு (15 ஜன 2020): கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை மடாதிபதி ஒருவர் பொது மேடையில் வைத்து அவமானப்படுத்தும் விதமாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் பஞ்சமாஷாலி சமுதாயத்தினரின் மாநாடு நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வச்சதானந்தா குருஜி, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்கா விட்டால், ஒட்டுமொத்த…

மேலும்...

பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பொங்கிய ஜெயக்குமார்!

சென்னை (15 ஜன 2020): பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் அரசை விமர்சிக்கிறார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்பதை மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். தற்போது கேரளா, குஜராத், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது, இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று…

மேலும்...

உயிருடன் புதைத்துவிடுவேன் – பாஜக பிரமுகர் மிரட்டல் பேச்சு!

அலிகார் (14 ஜன 2020): பிரதமர் மோடி குறித்து பேசுபவர்களை உயிருடன் புதைத்துவிடுவேன் என்று பாஜக பிரமுகர் வெறித்தனமாக பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா பிரமுகர் ரகுராஜ் சிங் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார். பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷமிடுபவர்களை உயிருடன் புதைத்து விடுவேன். இருவரும் உங்கள்…

மேலும்...

நிதிஷ்குமார் திடீர் மாற்றம் – பாஜக கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்பு!

பாட்னா (13 ஜன 2020): குடியுரிமை சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தேவையில்லை என்றும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளமை பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தும் பாஜக கூட்டணியில் உள்ள முதல் கட்சியாக ஜேடியு உருவெடுத்துள்ளது….

மேலும்...

தமிழக பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்!

புதுடெல்லி (13 ஜன 2020): தமிழக பா.ஜனதா தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட இருப்பதாக கட்சியின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா கவர்னான பிறகு புதிய தலைவராக எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்பட பலருடைய பெயர்கள் அடிபட்டன. சமீப காலமாக மாநில துணைத்தலைவர்கள் கருப்பு முருகானந்தம், குப்பு ராமு, நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இவர்களில் யாருக்கு மாநில தலைவர் பதவி…

மேலும்...

கேள்விகளால் பாஜக தலைவரை பிழிந்தெடுத்த கன்னையா குமார் – வீடியோ!

புதுடெல்லி (11 ஜன 2020): ஜே.என்.யூ தாக்குதல் தொடர்பான விவாத மேடையில் பாஜக தலைவரை அலற விட்டுள்ளார் கன்னையா குமார். சமீபத்தில் இந்துத்வா அமைப்பினரால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் கொடூரமாக தாக்கப் பட்டனர். இவ்விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா டிவி நடத்திய விவாதம் ஒன்றில் ஜே.என்.யூ முன்னாள் மாணவர் சங்க தலைவரும் தற்போதைய சிபிஎம் தலைவருமான கன்னையா குமார் மற்றும் பாஜக தலைவர் அமிதாப் சின்ஹா ஆகியோர்…

மேலும்...