முதல்வர் ஸ்டாலினுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கிய பிஎம்டபிள்யூ கார்!

துபாய் (25 மார்ச் 2022): தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு பிஎம்டபிள்யூ கார் வழங்கியுள்ளது. 4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று சென்று அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. இந்த உலகக் கண்காட்சி, துபாய்…

மேலும்...

வீட்டில் ஒரே அறையில் தங்கியிருத்தவரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை!

துபாய்(13 மார்ச் 2022): துபாயில் அறையில் ஒன்றாக தங்கியிருத்தவரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. துபாய் அல்ஐனில் வீட்டில் ஒரே அறையில் தங்கியிருந்த சக நண்பரை கொலை செய்த வழக்கில் 35 வயது ஆப்ரிக்கன் பிரஜைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. உம்முல் குவைனில் மிஸ்டிமெய்னர் நீதிமன்றம் கொலையாளிக்கு மரண தண்டனை விதித்தது. இருவரும் உமுல் குவைனில் அல் ஹம்ரா மாவட்டத்தில் வாடகை வீடு எடுத்து ஒரே அறையில் தங்கி வந்தனர். சொந்த நாட்டை சேர்ந்த…

மேலும்...

உலகின் முதல் காகிதமற்றதாக மாறும் துபாய் அலுவலகங்கள்!

துபாய் (12 டிச 2021): துபாயில் அரசுத் துறை முற்றிலும் காகிதமற்றது என்று துபாயின் பட்டத்து இளவரசரும் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அறிவித்தார். துபாயை டிஜிட்டல் நகரமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக ஷேக் ஹம்தான் 2018 இல் காகிதமில்லா திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் ஐந்து கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. ஐந்தாவது கட்டத்தின் முடிவில், துபாயில் உள்ள 45 அரசுத் துறைகளும் காகிதமற்றவை. இதன் மூலம், இந்த…

மேலும்...

துபாய் மற்றும் சவூதி அரேபியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்!

துபாய் (02 டிச 2021): கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் நுழைந்ததை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் உறுதிபடுத்தியுள்ளன. கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமிக்ரான் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமிக்ரான் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் இது அதி வேகமாக பரவி வரும் நிலையில், சவூதி அரேபியா மற்றும்…

மேலும்...

தீவிர இந்துத்வாவாதி சுதிர் சவுத்ரி துபாய் வருவதை நான் அனுமதிக்க மாட்டேன் – துபாய் இளவரசி கடும் கண்டனம்!

துபாய் (25 நவ 2021): கடும் எதிர்ப்பிற்கிடையே அபுதாபி நிகழ்ச்சியில் தீவிர இந்துத்வாவாதி சுதிர் சவுத்ரி கலந்துகொள்ளவுள்ள நிலையில் துபாய் இளவரசி ஹிந்த் பின்த் ஃபைசல் அல் காசிமி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். வலதுசாரி இந்து அறிவிப்பாளரான சுதிர் சௌத்ரி, இந்தியாவில் உள்ள 200 மில்லியன் முஸ்லீம்களை இலக்காகக் கொண்டு பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது பல பிரைம் டைம் நிகழ்ச்சிகள் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அபுதாபியில்…

மேலும்...

துபாய் இளவரசி எதிர்ப்பு – அபுதாபி நிகழ்ச்சியிலிருந்து இந்துத்வா கொள்கையாளர் ஜீ நியூஸ் சுதீர் சவுத்ரி நீக்கம்!

துபாய் (22 நவ 2021): துபாய் இளவரசி ஹிந்த் பின்த் ஃபைசல் அல் காசிமின் எதிர்ப்பைத் தொடர்ந்து அபுதாபி நிகழ்விலிருந்து தீவிர இந்துத்வா சிந்தனையாளரும், ஜீ.நியூஸ் தலைமை செய்தியாளருமான சுதிர் சவுத்ரி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வலதுசாரி இந்து அறிவிப்பாளரான சுதிர் சௌத்ரி, இந்தியாவில் உள்ள 200 மில்லியன் முஸ்லீம்களை இலக்காகக் கொண்டு பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது பல பிரைம் டைம் நிகழ்ச்சிகள் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை ஏற்படுத்தியுள்ளன. – இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…

மேலும்...

ஈரானில் இரட்டை நிலநடுக்கம் – துபாயில் கட்டிடங்கள் குலுங்கின!

துபாய் (14 நவ 2021): ஈரானில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தை அடுத்து துபாயில் சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் அபுதாபியில் வசிப்பவர்கள் “இரண்டு முதல் மூன்று நிமிடங்கள்” நீடித்த நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பல கட்டிடங்கள் காலி செய்யப்பட்டன. ஜுமைரா லேக் டவர்ஸ், நஹ்தா, டெய்ரா, பர்ஷா, துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பார்க் மற்றும் டிஸ்கவரி கார்டன்ஸ் போன்ற சமூகங்களில்…

மேலும்...

மீலாது நபியை முன்னிட்டு துபாயில் இலவச பார்க்கிங் வசதி!

துபாய் (21 அக் 2021): மீலாது நபியை முன்னிட்டு முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவின் சில பகுதிகளில் இலவச பார்க்கிங். மல்டி லெவல் பார்க்கிங் வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை டெர்மினல்களைத் தவிர, பொது பார்க்கிங் இலவசமாக இருக்கும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. சாலை, நீர் போக்குவரத்து மற்றும் சேவை மையங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வெளியில் புறப்படுவதற்கு முன்பு இணையதளத்தில் மறுசீரமைக்கப்பட்ட நேரத்தை சரிபார்க்க வேண்டும்…

மேலும்...

துபாய் வழியாக சவூதி செல்ல இந்தியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

ரியாத் (10 செப் 2021): சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மீண்டும் விமான சேவை இயக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் தினசரி புக்கிங்குகளை தொடங்கியுள்ளது. கோவிட் பரவலை தடுக்கும் விதமாக சவூதி அரேபியா கடும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கட்டம் கட்டமாக விமான போக்குவரத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சவூதி துபாய் விமான போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சவூதிக்கு…

மேலும்...

துபாயில் கொரோனாவால் ஒரு மரணம் கூட இல்லாத நாள் இன்று!

துபாய் (03 செப் 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒரு மரணம் கூட நிகழவில்லை என்று சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாடும் தினமும் ஒருவரையாவது இழந்து கொண்டு இருக்கிறது. இந்நிலைய்ல் கடந்த ஆண்டு நவம்பர் 14 அடுத்து துபாயில் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு கோவிட் மரணம் கூட பதிவாகவில்லை. கடுமையான கோவிட் விதிகள் மற்றும்…

மேலும்...