தமிழக கர்நாடக பாஜக-வினர் இடையே நடைபெறும் உச்சபட்ச காமெடி!

பெங்களூரு (31 ஜூலை 2021): கர்நாடகா பாஜக திட்டத்தை தமிழக பாஜகவினர் எதிர்ப்பதும், மத்தியில் ஆளும் பாஜக அதை பார்த்து கொண்டிருப்பதும் பெரிய நகைச்சுவை என்று அரசியல் ஆர்வலர்கள் கிண்டல் அடிக்கின்றனர். கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்ட நிலையில், மேகதாது அணையை குறித்து சபதம் எடுத்துக் கொண்ட விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வரின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேகதாது அணையைக் கட்ட கர்நாடகா…

மேலும்...

பாஜக அரசை எதிர்த்து பாஜக போராட்டம்!

சென்னை (29 ஜூலை 2021): கர்நாடக பாஜக அரசை எதிர்த்து, தமிழக பாஜக போராட்டம் அறிவித்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தஞ்சாவூரில் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும்...

நீட் தேர்வு ஆய்வறிக்கை என்ன சொல்கிறது? – நீதிபதி ஏ.கே ராஜன் விளக்கம்!

சென்னை (14 ஜூலை 2021): நீட் தேர்வு  ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி  ஏ.கே ராஜன் குழு இன்று சம்பர்ப்பித்தது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய கடந்த மாதம் 10-ம் தேதி நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் கருத்துக்களை பெற்று அதுதொடர்பான அறிக்கையை தயார் செய்து இன்று அந்த அறிக்கை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் அரசு பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு…

மேலும்...

கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்த தமிழர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!

அபுதாபி (04 ஜூலை 2021);கோவிட் 19 பாதிப்பால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடாவில் இறந்த தமிழர்களுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவிடால் இறந்த வளைகுடா கேரளவாசிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கேரளா அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று புகழ்பெற்ற நிறுவனமான லூலூ குழும உரிமையாளர் எம்.ஏ. யூசுப் அலி அபுதாபியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க உரிமை உண்டு கேரளா…

மேலும்...

தமிழ்நாடுதான் டாப், டெல்லி, பீகார் படுமோசம் – ஆய்வறிக்கை வெளியீடு!

புதுடெல்லி (03 ஜூலை 2021): கொரோனா 2ஆம் அலையை தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் சிறப்பாக கையாண்டதாகவும், டெல்லி, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மோசமாகக் கையாண்டு உள்ளதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2ஆம் அலை அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது. அதேபோல தினசரி உயிரிழப்புகளும் நான்காயிரம் வரை கூடச் சென்றது. ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக…

மேலும்...

தமிழ் நாட்டில் கொரோனாவால் ஒரேநாளில் 118 பேர் பலி!

சென்னை (30 ஜூன் 2021): கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 118 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32,506 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் செவ்வாயன்று 4,512 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,75,190 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்…

மேலும்...

நீட் தேர்வு விவகாரத்தில் திடீர் திருப்பம் – நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!

சென்னை (29 ஜூன் 2021): “நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது!” என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும்,…

மேலும்...

நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு டஃப் கொடுப்போம் – தமிழக அமைச்சர்!

சென்னை (27 ஜூன் 2021): நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழக அரசு இயற்றும் தீர்மானம் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்க முடியாத அளவில் இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த கால திமுக ஆட்சியில் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவுத்தேர்வு தடுக்கப்பட்டது. தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயப்படுகிறது. அக்குழுவின் அறிக்கை…

மேலும்...

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறதா பாஜக?

சென்னை இ(26 ஜூன் 2021): உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து பாஜக தலைமை முடிவெடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டிலிருந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர்,…

மேலும்...

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது? – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்!

சென்னை (23 ஜூன் 2021): தமிழகத்தின் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின் மீதான விவாதம் இன்று தொடங்கியது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ கேள்விக்கு, தமிழகத்தில் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது தான் பெட்ரோல் விலை குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சி…

மேலும்...