கொரோனா வைரஸ் : பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ முன்வந்துள்ள தமிழக முஸ்லிம்கள்!

திருச்சி (26 ஏப் 2020): கொரோனா பாதிக்கப்பட்டு பலரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வைரஸின் பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ நோயிலிருந்து நிவாரணம் பெற்ற முஸ்லிம்கள் முன்வந்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. ஜாதி மத பேதமின்றை அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. இந்நிலையில் டெல்லி தப்லீக் ஆலோசனை கூட்டத்துக்கு சென்று திரும்பிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அரசின் உத்தரவை அடுத்து தானாகவே முன் வந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு…

மேலும்...

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

சென்னை (19 ஏப் 2020): தமிழகத்தில் கடந்த வாரத்தில் குறைவான எண்ணிக்கையில் அதிகரித்த கொரொனா தொற்று இன்று (புதன்கிழமை மட்டும்) 105 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் என தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று வரை 1372 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஒரேநாளில் 50…

மேலும்...

திங்கள் முதல் பணிக்கு வர அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

சென்னை (19 ஏப் 2020): தமிழகத்தில் நாளை (20 ஏப்ரல் திங்கள் கிழமை) முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் முகக் கவசத்துடன் ஊழியா்கள் பணிக்கு வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுத் துறைகள் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதம்:- அரசுத் துறைகளின் இன்றியமையாத பணிகளுக்கான அலுவலா்கள், பணியாளா்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்திட அறிவுறுத்தப்படுகிறது. கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகியோா் சுழற்சி முறையில் பணிபுரிய கேட்டுக்…

மேலும்...

தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை!

சென்னை (16 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1267 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதாவது சென்னையில் 217 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 127 பேருக்கும் திண்டுக்கல்லில் 65 பேருக்கும்…

மேலும்...

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!

சென்னை (13 ஏப் 2020): தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில், கடந்த மார்ச் 24 மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதை ஏப். 15 காலை வரை…

மேலும்...

தமிமுன் அன்சாரி தமிழக அரசுக்கு ஆலோசனை!

சென்னை (11 ஏப் 2020): ஊரடங்கை அதிகரிக்கும் பட்சத்தில் தமிழக அரசு சிலவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி  எம்.எல்.ஏ  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வரும் நிலையில், இக்கால கட்டத்தில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் அரசு உரிய கவனம் செலுத்தும் என…

மேலும்...

தனி மாவட்டமாக உருவாகியது மயிலாடுதுறை!

சென்னை (08 ஏப் 2020): நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில், கடந்த மார்ச் 24ம் தேதி விதி எண்.110ன் கீழ் அறிவித்தார். இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையில்,” முதல்வரின் அறிவிப்புக்கு இணங்கவும், அரசு முதன்மை செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரை அடிப்படையிலும், தற்போது இருக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப்…

மேலும்...

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு சென்றவர்கள் எத்தனை தெரியுமா?

சென்னை (07 ஏப் 2020): தமிழகத்தில் இதுவரை 19 பேர் குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளனர். என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று வரை 621 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா தொற்றில் இருந்து தமிழகத்தில் 19 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை : 5,305. கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல்…

மேலும்...

மதத்தலைவர்களுடன் தலைமை செயலர் அவசரக் கூட்டம்!

சென்னை (03 ஏப் 2020): சென்னை தலைமை செயலர் அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று (03/04/2020) மாலை 03.00 மணிக்கு அனைத்து மத தலைவர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.கரோனா விவகாரத்தில் மதச்சாயம் பூசப்படுவதைத் தடுக்கும் நோக்கில் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே மாவட்டங்களில் மத தலைவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை செய்யவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும்...

இலவச ரேஷன் பொருட்கள் வழங்கல் :ஏப்ரல் 2 முதல் வீடுவாரியாக டோக்கன் வழங்கப்படும்!

சென்னை (01 ஏப் 2020): தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரூ.1000 ரொக்கத்துடன் ஏப்ரல் மாதத்துக்கான பொருள்களை இலவசமாக வழங்கும் திட்டம் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) தொடங்குகிறது. தமிழக அரசு அரிவித்துள்ள இந்தத் திட்டம் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) முதல் நடைமுறைக்கு வருகிறது. நாளொன்றுக்கு சுமாா் 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு வாரியாக டோக்கன் வழங்கப்படும், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று…

மேலும்...