
கர்நாடகம் சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பேர் விபத்தில் பலி!
கிருஷ்ணகிரி (06 மார்ச் 2020): கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தாலா கோயிலுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பக்தர்கள் விபத்தில் பலியாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10 பேர் காரில் கர்நாடகத்தின் தர்மஸ்தாலா கோயில் சென்றிருந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் அனைவரும் காரில் நள்ளிரவு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த கார் தும்கூர் அருகே குனிகல் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது….