தமிழகம் முழுவதும் இன்று போலியோ தடுப்பு முகாம்!

Share this News:

சென்னை (19 ஜன 2020): போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 5 வயதுக்கு உள்பட்ட சுமாா் 70.50 லட்சம் குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்குவதற்காக, சுகாதாரத் துறை, அந்தந்த மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43,051 மையங்களில் காலை 7 முதல் போலியோ தடுப்பு சொட்டு மருந்துகளை வழங்கி வருகிறது.

மேலும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் 1,652 சொட்டு மருந்து மையங்களும், 1,000 நடமாடும் போலியோ சொட்டு மருந்து மையங்கள் மூலமாகவும் போலியோ தடுப்பு சொட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன.

அண்மையில் பிறந்த குழந்தைகள், பிற மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள், ஓரிரு நாள்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகள் என அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய அவா்களின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது.

சொட்டு மருந்து வழங்கும் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் சுமாா் 2 லட்சம் போ் ஈடுபடுபட்டுள்ளனர்.

சென்னையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.


Share this News:

Leave a Reply