எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 07- வீடியோ!

Share this News:

எர்துருலின் சமயோஜித திட்டம்! அலெப்போ நிலத்துக்கு குடியேற்றம்! – எர்துருல் பருவம் 1, தொடர் 7.240p Mobile Version For Download Click Here

குண்டோக்டு தலைமையில் சென்ற வியாபார கேரவன் மீது கரடோய்கர் தாக்குதல் நடத்தி, அனைவரையும் கொன்று வியாபாரப் பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கிறான். குண்டோக்டுவின் ஆல்ப் ஹம்ஸாவும் குண்டோக்டுவும் கரடோய்கரிடம் கைதிகளாகின்றனர்.

குளிர்காலத்தில் காயி கோத்திரம் இடம்பெயர்வதற்கான இடத்தை அலெப்போ அமீர் எல் அஜீஸிடமிருந்து பெற்று, எர்துருல் வெற்றியுடன் கோத்திரத்துக்குத் திரும்பி வருகிறார். மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

பின்னர், ஹலீமா- வைச் சந்தித்து அலெப்போவிலிருந்து வாங்கி வந்தப் பரிசினை அளிக்கிறார். அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதைப் பார்க்கும் செல்சனும் கோக்சேவும் கோபம் கொள்கின்றனர். அலெப்போவிலிருந்து வந்த உடனேயே நேரடியாக அவளைப் போய் பார்த்ததாக அன்னை ஹேமிடம் சொல்கின்றனர். அன்னை ஹேம் அவர்களைக் கண்டிக்கிறார்.

தாம் அலெப்போ சென்றிருந்தபோது, ஹலீமா தங்கியிருந்த கூடாரம் மீது கரடோய்கர் ஆட்கள் தாக்குதல் நடத்தியதை அறிந்த எர்துருல், கோத்திரத்தினுள்ளேயே கரடோய்கருக்கு உதவும் உளவாளி இருப்பதாக சந்தேகிக்கிறார். அவனைக் கண்டுபிடிக்கத் தனியாக ஒருவரை நியமிக்கிறார்.

காயி கோத்திரம் அலெப்போவுக்குக் குடிபெயர்வதை விரும்பாத குர்தோக்லு, கோத்திர தலைமையகக் கூட்டத்தில் அலெப்போவில் நிலம் கிடைத்த சந்தோச செய்தியை எர்துருல் சொல்லும்போது அதற்கு எதிராக முடிவெடுக்க வைப்பதற்காக மற்ற பே-க்களைத் தூண்டி விடுகிறார். ஆனால், தலைமையக ஆலோசனை கூட்டத்தில் எர்துருலின் சமயோஜித பதிலால் அம்முயற்சி வெற்றிபெறாமல் கோத்திரம் அலெப்போவுக்கு இடம் பெயர்வது முடிவு செய்யப்படுகிறது.

டெம்ப்ளர்கள் கோட்டையில் தம் தந்தை இன்னும் கொல்லப்படவில்லை என்று நம்பும் எலனோரா, தம் தந்தையின் உடன் இருந்த அவரின் நண்பரிடம் இது குறித்து விசாரிக்கிறார். தம் தந்தை கொல்லப்பட்டுத் தம் கையாலேயே புதைத்ததாக கூறும் அவர் பதிலிலுள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி கேள்விகளால் துளைத்தெடுக்கிறார். பின்னர், தம் சகோதரி இசடோராவுக்குக் கடிதமொன்றை டைட்டஸிடம் கொடுத்தனுப்புகிறார். காயி கோத்திரம் அலெப்போ எல்லையில் குடியேறுவதைத் தடுப்பதற்காக டைட்டஸ் மீண்டும் கிளம்புகிறான்.

தாம் கைப்பற்றி வந்த குண்டோக்டுவிடம், இரண்டு இளவரசர்களையும் தம்மிடம் குண்டோக்டுவின் தந்தை தனியாக அழைத்து வந்தால் குண்டோக்டுவை உயிரோடு விடுவதாகவும் இல்லையேல் தம் கோட்டையிலேயே அவரைக் கொல்வேன் என்றும் இதற்கான தூது செய்தியை சுலைமான் ஷாவிடம் சொல்ல, குண்டோக்டுவின் நண்பர் ஹம்ஸாவை அனுப்பி வைப்பதாகவும் சொல்கிறான்.

தொடரும்…

எர்துருல் சீசன் 1 தொடர் 6 | எர்துருல் சீசன் 1 தொடர் 8


Share this News:

Leave a Reply