துணிவு – சினிமா விமர்சனம் – படம் எப்படி?

வினோத் இயக்கத்தில் அஜீத் மஞ்சு வாரியார் நடிப்பில் பொங்கல் கொண்டாட்டமாக முன்கூட்டியே வெளியாகியுள்ளது.

அஜித் உடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொகேன், பிரேம், சிபி சந்திரன், பாவனி, அமீர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

துணிவு படத்தை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் பலர் கொண்டாடி வருகின்றனர்.

அதேவேளை சிலர் முதல் பாதி நன்றாக உள்ளதாகவும் இரண்டாம் பாதி சுமார் என்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

விஷ்ணுவர்தனுக்கு அப்புறம் எச்.வினோத் தான் அஜித்தை மிகவும் ஸ்டைலிஷாக காட்டி உள்ளார். அஜித்தின் சமீபத்திய படங்களில் சிறந்த திரைக்கதை உள்ள படமாக இது உள்ளது.

அஜித் குமார் தனது நடிப்பில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. தனக்கென்று உள்ள தனி பாணியில் நடித்து ஹீரோவாகிய வில்லனாக படம் பார்வர்களை கவருகிறார். படத்தில் இடம்பெற்ற ஆக்ஷன் காட்சிகள் பிரமாதம்.

நடிகை மஞ்சு வாரியர் கண்டிப்பாக ஒரு சர்ப்ரைஸ் தான். தனது சிறந்த நடிப்பினால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்க்கிறார். நேர்த்தியான காட்சிகள், அஜித்தின் ஸ்டைலிஷ் ஸ்வாக் மற்றும் கைதட்டல்களை அள்ளும் வசனங்கள் ஆகியவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், துணிவு சிறந்த படமாக இருக்கும்.

ஹாலிவுட் லெவலில் துணிவு படத்தை எடுத்துள்ளார் எச். வினோத். அதற்க்கு தனி பாராட்டு. தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத படமாக துணிவு இருக்கும். இளைஞர்களை கண்டிப்பாக இப்படம் கவரும் என பதிவு செய்துள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply