கமல் படத்தில் சிம்பு – மாநாடு என்ன ஆச்சு?

Share this News:

சென்னை (01 அக் 2020): கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவன தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல இடையூறுகளுக்கு இடையே மாநாடு படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர்.

மீண்டும் படப்பிடிப்புகளை துவங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அண்மையில் அனுமதி அளித்தன. ஆனால் மாநாடு படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இந்நிலையில் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் கமல் ஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்திற்கு இரண்டு படங்களை இயக்குவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து லோகேஷ் கமல் ஹாசனை வைத்து படம் எடுக்கிறார்.

கமல் படத்தை முடித்த கையோடு ராஜ் கமல் நிறுவனத்திற்காக சிம்புவை வைத்து படம் எடுக்கப் போகிறாராம் லோகேஷ். இந்த படம் தொடர்பாக கமல் கடந்த வாரம் சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.

சிம்புவும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறினாராம். இதையடுத்து லோகேஷை அனுப்பி சிம்புவுக்கு கதை சொல்ல முடிவு செய்திருக்கிறாராம் கமல்.

சுசீந்திரன், லோகேஷ் கனராஜ் என அடுத்தடுத்து புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சிம்பு. இதற்கிடையே மாநாடு படத்தில் எப்பொழுது நடிப்பார் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Share this News:

Leave a Reply