பெருத்த நஷ்டம் – ரஜினியின் தர்பார் விநியோகஸ்தர்கள் கதறல்!

Share this News:

சென்னை (30 ஜன 2020): தர்பார் படம் விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன். இசை – அனிருத். தயாரிப்பு – லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியானது. முதல் நான்கு நாள்களில் தர்பார் படம் ரூ. 150 கோடி வசூலித்ததாக லைகா நிறுவனம் தகவல் வெளியிட்டது.

ஆனால், தர்பார் படம் எதிர்பார்த்த அளவில் வசூலை ஈட்டவில்லையென்பதால் ரஜினியிடம் நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளார்கள் விநியோகஸ்தர்கள். தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடு கட்டும் விதமாக இழப்பீட்டுத் தொகையை ரஜினி பெற்றுத் தரவேண்டும் என்று எட்டு மாவட்டங்களின் விநியோகஸ்தர்கள் சென்னையிலுள்ள ரஜினியின் இல்லத்துக்குச் சென்று நேரில் சந்திக்க முயன்றார்கள்.

எனினும், விநியோகஸ்தர்களை ரஜினி நாளை சந்திக்கவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், ரஜினியை நாளை சந்தித்த பிறகு வசூல் விவரம் குறித்து விநியோகஸ்தர்கள் விளக்கமளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply