நடிகை பிரியாமணி முஸ்தபா திருமணம் செல்லாது – முஸ்தபாவின் முன்னாள் மனைவி ஆயிஷா பரபரப்பு குற்றச்சாட்டு!

Share this News:

மும்பை (22 ஜுலை 2021): நடிகை பிரியாமணி மற்றும் முஸ்தபா ராஜ் திருமணம் செல்லாது என்று முஸ்தபாவின் முன்னாள் மனைவி ஆயிஷா பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

பிரியாமணி 2004 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் ’கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ’அது ஒரு கனாக்காலம்’ படத்தில் நடித்தார். 2006 ஆம் ஆண்டில் ’மது’ படத்திலும் நடித்தார். பின்னர் 2007 ஆம் ஆண்டில் அமீர் இயக்கத்தில் ’பருத்திவீரன்’ படத்தில் நடித்ததன் மூலம் மிக பிரபலமானார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார்.

தொடர்ந்து தமிழில் ’மலைக்கோட்டை’, ’தோட்டா’, ’ஆறுமுகம்’, ’நினைத்தாலே இனிக்கும்’, ’ராவணன்’, ’சாருலதா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை பிரியாமணியின் திருமணம் செல்லாது. அது சட்டவிரோதமானது என்று பிரியாமணியின் கணவர் மீது முதல் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டினை எழுப்பியிருக்கிறார்.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து வந்து ஒரு வருட காதலுக்கு பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டில் பெங்களூருவில் உள்ள சிவாஜி நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி. பின்னர் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. திரையுலகினர் பலரும் வந்து வாழ்த்தினார்கள்.

இந்நிலையில் முஸ்தபா ராஜ் முதல் மனைவி ஆயிஷா தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் முஸ்தபா ராஜ் நடிகை பிரியாமணியை திருமணம் செய்து கொண்டதாக கிரிமினல் வழக்கு தொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர், நாங்கள் இருவரும் இன்னமும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை. அதனால் பிரியாமணியின் திருமணம் சட்டவிரோதமானது. அது செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆயிஷா -முஸ்தபா ராஜ் இருவருக்கும் பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முஸ்தபா ராஜ் திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி அவர் வழக்கு தொடுத்துள்ளார். இதுகுறித்து முஸ்தபா ராஜ், ‘’ ஆயிஷா கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. குழந்தைகளுக்கு நான் பராமரிப்பு செலவுக்காக தவறாமல் பணம் கொடுத்து வருகிறேன்.

கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்தே நானும் ஆயிஷாவும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறோம். 2013 ஆம் ஆண்டில் இருவரும் முறையாக விவாகரத்து பெற்று விட்டோம். அதன் பின்னர்தான் 2014 ஆம் ஆண்டில் நான் பிரியாமணியை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் இத்தனை காலமும் அமைதியாக இருந்த ஆயிசா இப்போது ஏன் என் மீது வழக்கு தொடுக்கிறார். என்னிடமிருந்து மேலும் பணம் பறிப்பதற்காகத் தான் திட்டமிட்டு இப்படி ஒன்றை செய்து வருகிறார்.

இதுதொடர்பாக வழக்கு தொடுத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார். வழக்கு விசாரணையில் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்’’ என்கிறார்.


Share this News:

Leave a Reply