காவி குற்றவாளிகளுக்கு பூமாலை சூடலாம் சினிமாவில் காவி அணியக்கூடாதா? – நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!

Share this News:

பெங்களூரு (16 டிச 2022): பதான் திரைப்படத்தில் தீபிகா படுகோன் காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின், பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அந்த பாடலில் சில காட்சிகளில் காவி நிற கவர்ச்சி உடை அணிந்து தீபிகா படுகோன் நடனமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த பாடலின் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் இந்த படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கூறினார். மேலும் சிலர் இந்த பாடலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தீபிகா படுகோனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காவி உடை அணிந்தவர்கள் சிறுமிகளை வன்புணர்வு செய்யலாம், அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கலாம், காவி நிறம் அணிந்து வன்புணர்வு குற்றம் புரிந்தவர்களை வரவேற்ககலாம், ஆனால் சினிமாவில் காவி உடை அணியக் கூடாதா?” என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவருடைய இந்த பதிவுக்கு, சிலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply