பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை பின்னணி: சிக்குகிறாரா, பிரபல தமிழ் நடிகை!

Share this News:

மும்பை (12 செப் 2020): இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலையின் பின்னணியில் கைதாகி உள்ள நடிகை ரியா சக்ரபோர்த்தி அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 14ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்தார். முதலில் இதை தற்கொலை வழக்காக எடுத்து மும்பை போலீஸார் பதிவு செய்தனர். பின்னர் விசாரணையில், அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் அல்லது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்ரபோர்த்தி, இவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி உள்ளிட்ட சிலர் போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. மேலும், சுஷாந்த் சிங்குக்கு போதைப் பொருட்களை அவர்கள் வழங்கி வந்ததும் கண்டறியப்பட்டது.

தற்போது ரியா சக்ரபோர்த்தி உட்பட 9 பேர் கைதாகியுள்ளனர். இந்நிலையில் ரியா சக்ரபோர்த்தி அளித்துள்ள வாக்குமூலத்தில் சில பிரபல நடிகைகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அதில் ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் சாரா அலிகான் உள்ளிட்டோர் பெயரும் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply