நடிகையிடம் தவறாக நடந்துகொண்ட பொதுமக்கள் போலீஸ் தடியடி – VIRAL VIDEO

Share this News:

ஜார்கண்ட் (09 டிச 2022): பொது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகையைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று ஜார்க்கண்ட் அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போஜ்புரி நடிகை அக்ஷரா சிங் வந்திருந்தார். இவரை பார்க்க மக்கள் திரண்டனர். மேலும் சிலர் நடிகையிடம் தவறாக நடந்துகொண்டதாக தெரிகிறது. அப்போது போலீசார் தடியடி நடத்தினர். தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் வந்திருந்தார். முதல்வர் சென்ற பிறகு, மிகவும் பிரபலமான அக்ஷராவை பார்க்க பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் மக்கள் குவிந்தனர்.

வன்முறையில் ஈடுபட்ட மக்கள் விழாவுக்காக கொண்டு வரப்பட்ட நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இதனால், போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply