பென்குயின் – சினிமா விமர்சனம் (டிஜிட்டல் உலகின் திரில்லர்)

Share this News:

கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக திரையரங்கில் வெளியிடாமல் ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் வந்து வெற்றி பெற்றது. இப்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின் படமும் டிஜிட்டல் தளத்தில் ரிலிஸாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன்னுடைய குழந்தையுடன் பிரிந்து வாழ்க்கையை நடத்தி வருகின்றார். அப்போது தன் குழந்தைக்கு நிறைய கதை சொல்லி வளர்க்கின்றார்.

ஒரு கட்டத்தின் அவருடைய குழந்தை காணமல் போகிறது, இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் கீர்த்தி தன் மகனை தேடி வருகிறார். அதே நேரத்தில் மனதை சரி செய்துக்கொண்டு இரண்டம் திருமணம் செய்துக்கொள்கிறார்.

அப்போது அவருடைய மகன் கிடைத்துவிடுகிறார், இத்தனை நாட்கள் குழந்தையை கடத்தியது யார்? அதை தொடர்ந்து என்னென்ன நடக்கிறது என்ற சஸ்பென்ஸ் தான் இந்த பென்குயின்.

கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகத்திற்கு பிறகு வரும் சோலோ ஹீரோயின் படம். அதனாலேயே இப்படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது, எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றப்படியே கீர்த்தி மிரட்டியுள்ளார்.

அதோடு படத்தில் நடித்த அனைவருமே நன்றாக நடித்துள்ளனர், படத்திற்காக தேர்ந்தெடுத்த லொக்கேஷன் தான், திகில் காட்சிகளுக்கு மேலும் திகிலை ஏற்படுத்துகிறது. அதிலும் கீர்த்தி சொல்லும் கதைகளுக்கு ஏற்றது போலவே படத்தின் காட்சிகளும் நகர்வது சுவாரஸ்யம். ஆனால், படம் கொஞ்சம் ராட்சசன் சாயல் இருப்பதை தவிர்க்க முடியவில்லை.

அதோடு, படத்தில் ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல் காட்சிகளை கவனித்திருக்கலாம். அதே நேரத்தில் படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் அதிலும் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை மிரட்டியுள்ளது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவும் இரவின் அசத்தை கடத்துகிறது.

கொஞ்சம் ராட்சசன் சாயல் இருந்தாலும் திரில்லர் ரசிகர்களை பென்குயின் திருப்திப்படுத்தும்.


Share this News: