பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மரணம்!

Share this News:

மும்பை (06 feb 2022): பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 92.

லதா மங்கேஷ்கர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு ஜனவரி முதல் வாரத்தில் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் ஐசியூவில் இருந்து மாற்றப்பட்டார். எனினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கண்காணிப்பிற்காக ஐசியுவில் மீண்டும் சேர்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் வானம்பாடி என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், இந்தி தவிர மராத்தி மற்றும் பெங்காலி உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார். பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷன், தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

அன்பான பாடகர் மீண்டு வருவார் என்று ரசிகர்கள் பிரார்த்தனைகளுடன் காத்திருந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Share this News:

Leave a Reply