நடிகர் தனுஷ் ரஜினி மகள் ஐஸ்வர்யா விவாகரத்து – பரபரப்பு பின்னணி!

Share this News:

சென்னை (18 ஜன 2022): நடிகர் தனுஷ் மற்றும் மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்

தனுஷிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தாங்கள் பிரிவு செய்ய முடிவு செய்திருப்பதாக, இருவரும் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்கிற பின்னணி குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே விருப்பம் இல்லாமல் தான் இவர்களின் திருமணம் நடைபெற்றதாக பலர் பேசினர். இது கூட விவாகரத்திற்கு காரணமாக இருக்கலாம். பல ஆண்டுகளாக இருந்த மனகசப்பு இன்று விரிசலாகி உள்ளதாக கூறி வருகின்றனர்.

அதேவேளையில் பல நடிகைகளின் விவாகரத்தின் பின்னணியில் தனுஷ் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வந்தன. அதுவும் காரணம் என கூறப்படுகிறது. இது இப்படியிருக்கு இப்போது சமந்தா – நாகசைதன்யா விவகாரத்து சமயத்திலும் அதன் பின்னணியில் தனுஷ் இருப்பதாக சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply