பிரபல நடிகர் தற்கொலையின் பின்னணி – பிரபல நடிகை குறித்து திடுக்கிடும் தகவல்!

Share this News:

மும்பை (29 ஜூலை 2020): பிரபல பாலிவுட் நடிகர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் அவரது காதலியும் காரணம் என்பதாக போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை தொடர்ந்து அவருடைய தற்கொலைக்கு காரணம் பாலிவுட்டில் நடைபெறும் உள் அரசியல் மற்றும் வாரிசு அரசியல்தான் காரணம் என்று தெரிவித்து வருகின்றனர். போலீசாரும் பல பிரபலங்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுசாந்தின் காதலி என்று சொல்லப்படும் ரியா சக்ரோபாரதி மீது, சுஷாந்தின் தந்தை காவல்துறையில் புகார் அளித்திருப்பது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகாரை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரில், ரியா சக்ரோபாரதி, ரூபாய் 15 கோடியை சுஷாந்தை ஏமாற்றி, வேறு ஒரு அக்கவுண்ட்டுக்கு மாற்றியுள்ளதாக அவர் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் ரியாவும் இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டு, தனது மகனுக்கு பொருளாதார ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் அழுத்தங்கள் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுஷாந்திற்கு ஏற்கனவே மன அழுத்தம் இருந்ததாக கூறப்படுவதும் தவறான தகவல் என்றும், சுஷாந்திற்கு மருத்துவம் பார்த்ததாக சொல்லப்படும் மருத்துவர்கள் விசாரிக்கப்பட வேண்டும், ரியா கடைசியாக சுஷாந்திடம் இருந்து செல்லும்போது, அவரின் க்ரெடிட் கார்டு, லேப்டாப், இன்னும் சில மெடிக்கல் ஃபைல்கள் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றுள்ளார். என்றும் அந்த எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply