அவதார் 2 – சினிமா விமர்சனம்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அவதார். உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற இப்படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் 13 வருடங்களுக்கு பின் இன்று வெளிவந்துள்ளது.

மிகுந்த எதிர் பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ததா? பார்ப்போம்.

அவதார் 2 கதைக்களம்.

நாவி இனத்தின் தலைவனாகவும், நான்கு பிள்ளைகளின் அப்பாவாகவும் தனது மனைவி நெய்டிரியுடன் சேர்ந்து சந்தோஷமாக பண்டோராவில் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் ஜேக். இந்த சமயத்தில் மீண்டும் பண்டோராவில் மனிதர்களின் கால்தடம் படுகிறது.

இந்த முறை பண்டோராவில் புதிய உலகத்தை உருவாக்க வேண்டும் என்று ராணுவம் மிகப்பெரிய படையுடன் புறப்பட்டு வந்துள்ளது. இவர்களுக்கு உதவ Colonel Quaritch வருகிறார். முதல் பாகத்தில் மனிதானாக இறந்துபோன Colonel Quaritch தனது நினைவுகளை சிப் மூலம் ஸ்டோர் செய்து நாவி உடலில் புகுந்து மீண்டும் கதாநாயகன் ஜேக்கை பழிவாங்க வருகிறார்.

Colonel Quaritch தனது வீரர்களுடன் பண்டோரா காட்டுக்குள் வரும் பொழுது ஜேக்கின் மகன் மற்றும் இரு மகள்களுடன் இணைந்து Colonel Quaritchன் மகன் மைல்ஸ், Colonel Quaritchயின் வீரர்களிடம் சிக்கிக்கொள்கிறார்கள். ஆனால், கதாநாயகன் ஜேக் தனது மகன் மற்றும் இரு மகள்களை போராடி காப்பாற்றி விடுகிறார். ஆனால், மைல்ஸ் Colonel Quaritchயிடம் கைதியாக மாட்டிக்கொண்டார்.

இதன்பின் பண்டோராவில் இருந்தால் தனது மனைவி, மகன்கள், மகள்களை இழந்துவிடுவேன் என்று என்னும் ஜேக் தனது அரச பட்டத்தை வேறொருவருக்கு கொடுத்துவிட்டு, பண்டோராவில் இருந்து வெளியேறி, கடல் வாசி நாவிகளிடம் தஞ்சம் கேட்டு செல்கிறார். கடல் நாவிகளின் அரசர் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க சம்மதிக்க, அங்கு கடல் சார்த்த விஷயங்களை ஜேக்கும் அவரது குடும்பமும் சற்று கஷ்டப்பட்டு கற்றுக்கொள்கிறார்கள்.

இப்படி நாட்கள் செல்லும் சமயத்தில் வில்லன் Colonel Quaritch இவர்கள் இருக்கும் இடத்தை தேடி அலைய துவங்குகிறான். இந்த தேடலில் வில்லன் Colonel Quaritchயிடம் ஜேக் குடும்பத்தின் சிலர் சிக்கி கொள்கிறார்கள். வில்லனை எதிர்த்து போராடாமல் தஞ்சம் கேட்டு சென்ற ஜேக் இறுதியில் தைரியத்துடன் தனது குடும்பத்தை காப்பற்றினாரா? இல்லையா? இதில் எற்பட்ட இழப்பு என்ன? என்பதே படத்தின் மீதி கதை..

ஒவ்வொரு முறையும் தனது இயக்கத்தினால் நம்மை வியப்பில் ஆழ்த்தும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இந்த முறையும் அதை கச்சிதமாக செய்துள்ளார். ஒவ்வொரு நாவிகளையும் அருமையாக வடிவமைத்துள்ளார். குறிப்பாக கடல் நாவிகளாக வரும் கதாபாத்திரங்கள் படத்திற்கு புதுமையூட்டுகிறது.

கதாநாயகன், கதாநாயகி இருவருமே நாம் முதல் பாகத்தில் பார்த்ததை விட அசத்தலாக காட்சியளிக்கிறார்கள். எந்திரங்களை பயன்படுத்திய விதம், 3டி கிராஃபிக்ஸ், எமோஷனல் கதைக்களம் என தனது இயக்கத்தின் மூலம் மிரட்டுகிறார் ஜேம்ஸ் கேமரூன்.

முதல் பாகத்தில் எப்படி அனைவரையும் காடு வியப்பில் ஆழ்த்தியதோ, அதே போல் இந்த இரண்டாம் பாகத்தில் கடலுடைய நீர் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் கற்பனை படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறது. முக்கியமாக இப்படத்தின் திரைக்கதை எழுதிய ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜெஃபா, அமண்டா சில்வர் அனைவருக்கும் தனி பாராட்டு. சில இடங்களில் சலிப்பு தட்டினாலும், விஷுவல் மூலம் நம்மை வியக்க வைத்த VFX மற்றும் அனிமேஷன் குழுவிற்கு நன்றி. இந்த குழுவில் பணிபுரிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அனைவருக்கும் தனி பாராட்டு.

மேக்கப் கலைஞர்களின் உழைப்பு அசாத்தியம். கலை துறை {Art Department} கற்பனைக்கு எட்டாத விஷயத்தையும் நம்புவதுபோல் காட்டியுள்ளார்கள். Sound மற்றும் ஸ்பெஷல் Effects இரண்டுமே படத்தை ரசிக்க வைக்கிறது. முக்கியமாக கடிமாக ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்த குழுவிற்கு கைதட்டல்கள். பின்னணி இசை படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு.

திரையரங்க அனுபவத்திற்காக படத்தை நிச்சயம் பார்க்கலாம்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply