போதைப் பொருள் பயன்படுத்திய விஜய் பட நடிகை – விஜயின் புதிய படத்திலிருந்து நடிகை நீக்கமா?

Share this News:

மும்பை (22 அக் 2021): போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையதாக நடிகை அனன்யா பாண்டேயிடம் போலீசார் விசாரனை மேற்கொண்ட நிலையில் விஜயின் புதிய படத்தில் நடிக்க ஆலோசிக்கப் பட்டிருந்த நடிகை அனன்யா பாண்டே விஜயின் படத்தில் நடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் கப்பலி்ல் சென்றனர். அப்போது தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர் கப்பலில் நடத்திய சோதனையில், 3000 கிலோ ஹெராயின் கிடைத்தது. சுமார் 9000 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் இது. அது யாருடையது, யார் கடத்தி வந்தார்கள் என்ற தகவல்கள் தெரியாத நிலையில், நடிகர் ஷாருக்கான் மகனும் வேறு சிலரும் கப்பலில் பார்ட்டி நடத்தியபோது போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்பட்டது. இதனை அடுத்து தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர் ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை கைது செய்தனர்.

மேலும் இவ்வழக்கில் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஜாமின் கிடைக்காததால், மும்பையில் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஆர்யன் கான் உள்ளார்.

இந்நிலையில் ஆர்யனை சிறையில் சந்தித்து பேசினார் ஷாருக்கான். ஆர்யன்கான் கைதான பிறகு, தந்தை மகன் இடையே நிகழும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.

கைதிகளை சந்திக்க மஹாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து நடந்த இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.

இந்த சந்திப்பு முடிந்த சில மணி நேரங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு சென்றனர். அங்கு ஆர்யன் வழக்கு தொடர்பாக சில விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.

இதற்கிடையே ஆயன் கான் செல்போனில் இருந்து அனன்யா பாண்டேயின் வாட்ஸ்அப்புக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அனன்யா பாண்டேயிடமும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதலில் அனன்யா பாண்டேயின் வீட்டிற்கு வந்து விசாரித்தனர். பிறகு அனன்யா பாண்டே போலீஸ் ஸ்டேசன் சென்று விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார். இந்தப் பிரச்சனை இன்னும் நீளும் என்றே தோன்றுகிறது. இதனால் விஜய் 66 படத்தில் அனன்யா பாண்டேயை நாயகியாக்கும் முடிவை இயக்குனரும், தயாரிப்பாளரும் மறுபரிசீலனை செய்துள்ளனர்.


Share this News:

Leave a Reply