பிரபல நடிகைக்கு கத்தி குத்து – தயாரிப்பாளர் வெறிச்செயல்!

Share this News:

மும்பை (28 அக் 2020): பிரபல சீரியல் நடிகை மால்வி மல்ஹோத்ராவை தயாரிப்பாளர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த மால்வி மல்ஹோத்ரா சீரியல்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 26-ஆம் தேதி இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது யோகேஷ் மஹிபால் சிங் என்பவர் வழிமறித்துள்ளார்.

தன்னை ஒரு தயாரிப்பாளர் என்று கூறிக் கொண்ட மஹிபால் சிங் திருமணம் செய்துகொள்ளுமாறு மால்வியிடம் கூறியுள்ளார். அதற்கு மால்வி மறுப்பு தெரிவிக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நடிகையின் வயிற்றிலும், கைகளிலும் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார் யோகேஷ்.

இதையடுத்து படுகாயம் அடைந்த நடிகை மால்வி மல்ஹோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


Share this News:

Leave a Reply