கீழிறங்கும் டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு!

வாஷிங்டன் (01 மே 2020): அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் தவறியதன் விளைவு அங்கு அவரது செல்வாக்கு அதிவேகத்தில் சரிந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் தான் வேட்பாளர் என்பது ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்ட விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சியில் ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிடுமளவுக்கு வேட்பாளர்கள் இல்லாததால், ட்ரம்ப் தான் அடுத்த அதிபர் அரசியல்…

மேலும்...

கனடாவில் முதல் முறையாக பொதுவெளியில் ஒலித்த பாங்கோசை!

டொரான்டோ (30 ஏப் 2020): கனடா நாட்டில் முதல் முறையாக ரம்ஜான் மாதத்தில் பொது வெளியில் ஒலிப்பெருக்கியில் பாங்கின் ஓசை ஒலிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களை ஐந்து வேளை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு பொதுவில் ஒலிப்பது கிடையாது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் மேற்கத்திய நாடுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கனடாவிலும் ஐந்து வேளை தொழுகைக்கு பொதுவெளியில் ஒலிப்பெருக்கியில் பாங்கு அழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டொரான்டோ ஜும்மா மசூதி உறுப்பினர் இர்ஷாத்…

மேலும்...

இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய கோரிக்கை!

கொழும்பு (29 ஏப் 2020): சென்னையில் கடந்த ஒரு மாதமாக சிக்கித் தவித்துவரும் 160 இலங்கையர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்டு வர வேண்டும் என வெளி விவகார அமைச்சுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் வெளியுறவுத்துறை செயலாளர் ரவிநாத் ஆரியசிங்கேவுக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாடு திரும்ப முடியாமல் சென்னையில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் (சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள்) மன உளைச்சலுக்கும்…

மேலும்...

உலக அளவில் கொரோனா தாக்குதல் 31 லட்சம் – பலி இரண்டு லட்சத்துக்கும் மேல்!

நியூயார்க் (29 ஏப் 2020): சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் இரண்டு லட்சத்து 18 ஆயிரத்தைக் கடந்தது. சீனாவின் வூஹான் நகரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி, பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், உலக மக்களை, தனது அச்சத்தின் பிடியில் கொரோனா வைரஸ்…

மேலும்...

கொரோனா பீர் – தலைவலியில் மதுபான நிறுவனம்!

மெக்சிகோ (26 ஏப் 2020): கொரோனா என்ற பெயர் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்க கொரோனா பீர் என்ற பெயரில் உள்ள மதுபான நிறுவனம்தான் இப்போது செய்வதறியாமல் திணறி நிற்கிறது. மெக்சிகோ தயாரிப்பான கொரோனா பீர, கொரோனா நோய்க்கும், அந்த நிறுவனத்தின் பீருக்கும் எந்த தொடர்புமில்லை என பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. கொரோனா என்ற லத்தீன் சொல்லுக்கு மலர் மகுடம் என்று பொருளாகிறது. அது போன்ற தோற்றத்தைக் கொண்ட வைரசுக்கு கொரோனா வைரஸ் என பெயர் சூட்டப்பட்டது இது பீர்…

மேலும்...

அமெரிக்க நகரங்களில் ஒலிக்கும் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு)

வாஷிங்டன் (26 ஏப் 2020): அமெரிக்காவில் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) பல இடங்களில் ஒலிக்கிறது. அமெரிக்காவில் ஒலிப்பெருக்கி மூலம் பாங்கு சொல்ல பல இடங்களில் கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இவ்வருட புனித ரமலான் மாதத்திற்காக அக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டுள்ளன. அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரின் மேயர் ஜேக்கப் பிரே, நகரின் அனைத்து பகுதிகளிலும் ரமலான் மாதத்தின் அனைத்து தினங்களிலும் ஐந்து வேளைக்கும் ஒலிப் பெருக்கி மூலம் பாங்கு அழைப்புக்கு அனுமதி அளித்துள்ளார். அமெரிக்கா கொரோனாவால் அதிக…

மேலும்...

ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தால்தான் அதிக உயிரிழப்பு – அமெரிக்கா அதிர்ச்சி தகவல்!

வாஷிங்டன் (23 ஏப் 2020): கொரோனாவுக்கு வழங்கப்பட்ட ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தால்தான் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த இன்றளவும் ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதே போன்று தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு, இந்தியாவில் மலேரியாவுக்கு தருகிற ஹைட்ராக்சிகுளோராகுயின் மாத்திரைகள் நன்றாக வேலை செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்து ஏற்றுமதிக்கு…

மேலும்...

தண்ணீரிலிரும் பரவும் கொரோனா – பிரான்ஸ் அதிர்ச்சித் தகவல்!

பாரிஸ் (21 ஏப் 2020): கொரோனா வைரஸ் தண்ணீரிலும் பரவுவதாக பிரான்ஸ் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும்கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய நாடான பிரான்சில் இதுவரை 1.52லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் 20 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழப்பை சந்தித்த நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் போர்க்கால அடிப்படையில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரிஸ் நகரின் சீன் நதி…

மேலும்...

கனடாவில் பயங்கரம் – மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி!

டொராண்டோ (20 ஏப் 2020): கனடாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கன்டாவின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். போலீசார் போல் உடையணிந்து கொண்டு வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர் பலரது வீடுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பெண் போலீசார் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். மற்றொரு காவலர் காயமடைந்து உள்ளார். உயிரிழந்த பெண்…

மேலும்...

கொரோனாவால் இதுவரை 23 லட்சம் பேர் பாதிப்பு!

நியூயார்க் (18 ஏப் 2020): உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 23 லட்சத்து 6 ஆயிரத்து 016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 028 பேர் பலியாகி உள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் உலகின் 200 க்கும் அதிகமான நாடுகள் பாதிப்படைந்துள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 23 லட்சத்து 6 ஆயிரத்து 016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 028 பேர் பலியாகி உள்ளனர். 5 லட்சத்து 88 ஆயிரத்து 633 பேர்…

மேலும்...