ஆர்.எஸ்.எஸ், பாஜகவுடன் தொடர்புடைய அதிகாரிகள் நீக்கம் – அமெரிக்க அதிபர் அதிரடி!

வாஷிங்டன் (22 ஜன 2021): ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுடன் தொடர்பு வைத்திருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை பைடன் அரசு, தனது நிர்வாகத்திலிருந்து நீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அந்நாட்டின் துணை அதிபராகப் பதவியேற்றார். ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்தே பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்களுக்கு…

மேலும்...

10 நிமிட சார்ஜில் 400 கிலோ மீட்டர்: சூப்பர் பேட்டரி!

நியூயார்க்(19/01/2021): வெறும் 10 நிமிட ரீசார்ஜிங்கில் 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனம் ஓடுவதற்கான சக்திகொண்ட சூப்பர் பேட்டரி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் கார்பன் புகையால் ஏற்படும் சூழலியல் பாதிப்பு குறித்த கவலையும் அதனைக் குறைப்பதற்கான முயற்சிகளும் உலகின் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து எடுத்துவருகின்றன. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் கடந்து காற்றை மாசுபடுத்தாத பேட்டரி சார்ஜ் மூலம் இயங்கும் வாகனங்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், எண்ணெயில் இயங்கும் வாகனங்கள் அளவுக்கு…

மேலும்...

முகம் மூடுபவர்களுக்கு அதிக கொரோனா பாதிப்பு-ஆய்வு முடிவு!

நியூயார்க்(17/01/2021): முகம் மூடாதவர்களைவிட முகத்தை மூடுபவர்களுக்குத் தான் கொரோனா பாதிப்பு அதிகம் என ஆய்வு முடிவொன்று வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வெர்மோன்ட் மாகாணத்திலுள்ள வெர்மோன்ட் மருத்துவப் பல்கலை கழகம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடையேயும் பாதிக்கப்படாதவர்களிடையேயும் ஆய்வொன்றை நடத்தியது. அதில், முகத்தை மூடாமல் இருப்பவர்களைவிட முகத்தை மூடியிருப்பவர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு, முகத்தை மூடியிருப்பவர்களிடையே தாம் பாதுகாப்பாக இருப்பதான உணர்வு எழுவதால் எவ்விதத் தயக்கமும் இன்றி மற்றவர்களிடையே கலந்து உறவாடுவதுதான் காரணம். ஆனால் அதே…

மேலும்...

வாட்ஸ்ஆப் அப்டேட்டிங் திட்டத்தில் திடீர் மாற்றம்!

நியூயார்க்(16 ஜன 2021): வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டிங் கொள்கையை அமல்படுத்துவதை மே 15 வரை ஒத்திவைத்துள்ளது. கடந்த மாதம் வாட்ஸ்ஆப் அப்டேட்டிங்கில் தனி மனித சுதந்திர தலையீடு இருக்கக் கூடும் என்ற அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எதிர்ப்புக்களை சம்பாதித்துக் கொண்டது. இதனை அடுத்து அப்டேட்டிங் புதுப்பிப்பைத் தற்போதைக்குச் செயல்படுத்த வேண்டாம் என்று வாட்ஸ்ஆப் முடிவு செய்துள்ளது. மேலும், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களுக்கு மக்கள் பெருமளவில் மாறுவது வாட்ஸ்ஆப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது….

மேலும்...

பயனர்களுக்கு வாட்ஸ் அப்பின் முக்கிய விளக்கம்!

நியூயாக் (12 ஜன 2020): பரபரப்பான சூழலில் பயனர்களுக்கு வாட்ஸ் அப் முக்கிய அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பயனர்களின் பிரைவசியில் வாட்ஸ் அப் தலையிடாது. பயனர்களின் உரையாடல்களை வாட்ஸ் அப்,/பேஸ்புக் கவனிக்காது. பயனர்களின் தகவல்களை வாட்ஸ் அப் சேமிக்காது. தொடர்பு  எண்களை பேஸ்புக்குடன் பகிறாது. குறிப்பிட்ட காலங்களில் மெஸேஜ்களை பயனர்களே நீக்கம் செய்யலாம். வாட்ஸ் அப் குழுமங்கள் வழக்கம்போல் செயல்படலாம் வழக்கம்போல் பகிர்வுகள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். வாட்ஸ் அப் குறித்து வெளியான பரபரப்பான தகவல்களை…

மேலும்...

இந்தோனேஷியா பயணிகள் விமானம் 62 பயணிகளுடன் திடீர் மாயம்!

ஜகார்த்தா (09 ஜன 2021): இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திடீரென மாயமாகியுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமனவிமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரிலிருந்து மறைந்துள்ளது. போயிங் 737 ரக விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகத் தகவல்கள்…

மேலும்...

கலவரக் களமான வெள்ளை மாளிகை – டிரம்புக்கு எதிராக பேஸ்புக் ட்வீட்டர் நடவடிக்கை!

வாஷிங்டன் (07 ஜன 2021): அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது….

மேலும்...

பொது சுகாதாரத்திற்காக முதலீட்டை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு வலியுறுத்தல்!

ஜெனீவா(28 டிச 2020): பொது சுகாதாரத்தில் முதலீட்டை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் ஜெப்ரியாஸ் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். “எதிர்கால தொற்றுநோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும்” என்று டிசம்பர் 27 சர்வதேச தொற்றுநோய் தினத்தில் டெட்ரோஸ் அதானோம் ஜெப்ரியாஸ் தெரிவித்தார். மேலும் “இது கடைசி தொற்றுநோயாக இருக்காது என்று வரலாறு நமக்குக் கூறுகிறது, தொற்றுநோய்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும்” என்று அவர் வலியுறுத்தினார்….

மேலும்...

நைஜீரியாவில் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் – 400 மாணவர்கள் மாயம்

நைஜீரியாவிலுள்ள நடுநிலைப் பள்ளியொன்றில் ஆயுதக் கும்பல் நடத்தி தாக்குதலுக்குப் பிறகு 400 மாணவா்கள் மாயமாகினா். அந்த நாட்டின் காட்சினா மாகாணத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலின்போது 200 மாணவா்கள் அங்கிருந்து பத்திரமாகத் தப்பினா். இதுகுறித்து அந்த மாகாண காவல்துறை செய்தித் தொடா்பாளா் காம்போ இசா கூறியதாவது: கங்காரா நகரில் மாணவா்கள் தங்கிப் படிக்கும் அரசு அறிவியல் நடுநிலைப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த ஆயுதக் கும்பல் ஏகே 47 ரகத் துப்பாக்கிகளைக் கொண்டு சரமாரியாக சுட்டது. அதனைத் தொடா்ந்து,…

மேலும்...

ஒரு ஹேப்பி நியூஸ் – உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு வழங்க அனுமதி!

லண்டன் (02 டிச 2020): பைசர் – பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் நிலையில் பைசர் – பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்துவதாக விஞ்ஞானிகள் உறுதி அளித்தனர். இந்த தடுப்பூசி 95 சதவீதம் பலனளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. லண்டன்: பிரிட்டனில்…

மேலும்...