TN-Students

சி.ஏ. படிக்க பத்தாவது பாஸானாலே போதுமாம்!

சென்னை (21 அக் 2020): பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே பட்டய கணக்காளர் படிப்பில் சேரலாம் என இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவித்துள்ளது. சி.ஏ. சேர்வதற்கு Institute of Chartered Accountants of India எனப்படும் அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த பவுண்டேசன் கோர்ஸ் என்பது, பிளஸ்-டூ முடித்தவர்கள் எழுதலாம் என இருந்த நிலையில், தற்போது 10 ஆம் வகுப்பு படித்தவர்களும் எழுதலாம் என கூறப்பட்டு உள்ளது. புதிய நடைமுறையை இந்தாண்டே அமல்படுத்துவதாக பட்டய…

மேலும்...

ரூ 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் லாரியோடு கடத்தல்!

ஓசூர் (21 அக் 2020): சென்னையிலிருந்து மும்பைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கொண்டு சென்றபோது மேல்மலை என்ற இடத்தில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரை தாக்கி செல்போன்களுடன் கண்டெய்னர் லாரி கடத்தப்பட்டது. அழகுபாவியில் லாரியை நிறுத்திவிட்டு ரூ.10 கோடி மதிப்புள்ள செல்போன்களுடன் மர்மநபர்கள் தப்பி சென்றனர்….

மேலும்...

குறைந்து வரும் கொரோனா – தமிழக மக்களுக்கு சற்று ஆறுதல்!

சென்னை (21 அக் 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 6,94,030 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் புதிதாக 857 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,91,754 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில், 263 பேருக்கு கொரோனா…

மேலும்...

சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்!

திருச்சி (19 அக் 2020): தமிழகத்தில் சட்டமன்ற பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தார். திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் திங்கட்கிழமை மாலை அரிஸ்டோ மஹாலில் அக்கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ.எம். முஹம்மது…

மேலும்...

சிறையிலிருந்து சசிகலா பரபரப்பு கடிதம்!

சென்னை (20 அக் 2020): சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தனது வழக்கறிஞர் செந்தூர் பாண்டியனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தங்களுடைய ‘06.10.20’ தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். விவரங்களை அறிந்து கொண்டேன். நாங்கள் நலமாக இருக்கிறோம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். ‘கோவிட்’ காரணமாக தமிழக மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் எனக்கு வேதனையை அளிக்கிறது. கோவிட் நோய்த் தொற்று பரவலினால் தமிழகத்தில்…

மேலும்...

வெங்காய விலை கிடுகிடு உயர்வு!

சென்னை (20 அக் 2020): ஆந்திரா, கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்.அங்கு இருந்து வரும் வெங்காயத்தின் வரவு குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 100 முதல் 110 வரை விற்பனையாகிறது. ரூ. 80க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை மேலும் 20 முதல் 30 வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு…

மேலும்...

விஜய் சேதுபதிக்கு அவமானம் – திருமாவளவன் கருத்து!

சென்னை (19 அக் 2020) : 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேயற்றப்பட்டுள்ளார் என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “விஜய் சேதுபதி தமிழினத்தின் கோரிக்கையைப் புறந்தள்ளினார். மு.முரளிதரன் விஜய்சேதுபதியைப் புறந்தள்ளினார். அவர் ‘800’ படத்தில் நடிப்பதிலிருந்து வெளியேறவில்லை; வெளியேற்றப்பட்டார். அவர்,மகிழ்ச்சியாய் அல்ல; விரக்தியாய் “நன்றிவணக்கம்” என்கிறார். இது அவருக்குநேர்ந்த அவமதிப்பு. என்று திருமா தெரிவித்துள்ளார்.

மேலும்...

ஜோதிகாவின் நிதியுதவியால் புத்துயிர் பெற்ற அரசு மருத்துவமனை!

தஞ்சாவூர் (19 அக் 2020): நடிகை நிதியுதவியால் தஞ்சை அரசு மருத்துவமனை புத்துயிர் பெற்றுள்ளது. நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் அதுகுறித்து ஒரு விழாவில் பேசிய ஜோதிகா, “கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள்….

மேலும்...

முதல்வர் எடப்பாடியுடன் ஸ்டாலின் சந்திப்பு!

சென்னை (19 அக் 2020): தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்தார். முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தனது தாயாரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற பின், நேற்று மாலை 6.05 மணிக்கு சிலுவம்பாளையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். இரவு 9.20 மணிக்கு அவர் சென்னை வந்தடைந்தார். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில்…

மேலும்...

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை – ஆதார் ஆணையம் தகவல்!

சென்னை (18 அக் 2020): நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 10 பேரின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்கள் முறைகேடாக தேர்ச்சி அடைந்து, மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதில் மாணவர்கள், பெற்றோர், இடைத்தரகர் என 15க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஆள்மாறாட்டம், கூட்டுச்சதி, போலியாக ஆவணங்களை தயாரித்தல் ஆகிய 3 பிரிவுகளின்…

மேலும்...