ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு!

மதுரை (02 நவ 2020): ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்கள் தடை செய்யக்கோரி அவசர வழக்காக விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டம் மூலம் ஏராளமான அப்பாவி மக்கள் பல்லாயிரக் கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர் என்றும் வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்தார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டம் உள்ளிட்டவற்றால் பல இளைஞர்கள் தற்கொலை மற்றும் பணம் இழப்பது தொடர்ந்து…

மேலும்...

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு அதிர்ச்சி அளிக்கிறது – ஸ்டாலின்!

சென்னை (01 நவ 2020): தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண்துறை அமைச்சர் திரு.துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத் துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்! மூன்றுமுறை பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று 2016-ல் வேளாண்துறை அமைச்சராக…

மேலும்...

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி!

புதுடெல்லி (31 அக் 2020): உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி அப்போது பேசும்போது, “உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாருக்கும் பலனில்லை. இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியுள்ளது.. புல்வாமா தாக்குதலின்போது பாதுகாப்புப்படையினர் செய்த…

மேலும்...

எச்.ராஜாவா? எல் முருகனா? – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு!

ராமநாதபுரம் (31 அக் 2020): தேவர் குருபூஜையை தமிழக பாஜக தலைவர் எல் முருகனை விட்டுவிட்டு எச் ராஜாவுக்கு மரியாதையை செய்யப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முதல்வர், துணை முதல்வரும், திமுக சார்பில் முக ஸ்டாலினும், இன்னும் பல கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அது போலவே பாஜக சார்பிலும்…

மேலும்...

புதிதாக கட்டப்படும் மருத்துவக் கல்லூரி இடிந்து நாசம்!

நாமக்கல் (30 அக் 2020): நாமக்கல்லில் கட்டப்படும் புதிய மருத்துவக் கல்லூரி இடிந்து கடும் சேதமடைந்துள்ளது. நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் 270 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் சத்தியமூர்த்தி அண்ட் கோ நிறுவனம் 150 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெற்று பணிகளை மேற்கொண்டனர். 45 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மருத்துவ கல்லூரியில் இரண்டாம்…

மேலும்...

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு ஸ்டாலின் வரவேற்பு!

சென்னை (30 அக் 2020): மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை….

மேலும்...

ஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி!

கோதாவரி (29 அக் 2020): கிழக்கு கோதாவரி ஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் பரிதாபமாக உயியிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், பூதேவிபேட்டாகிராமத்தை  சேர்ந்தவர்கள் வேலருபாடு மண்டலத்தில் வசந்தவாடா கிராமத்திற்குச் சென்று ‘வனபோஜனம்’ (காட்டில் விருந்து) கொண்டாட, தாசரா பண்டிகைக்குப் சென்று உள்ளனர். அப்போது கிழக்கு கோதாவரி ஆற்றில் 6 சிறுவர்கள் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். . நீரில் மூழ்கத் துவங்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை…

மேலும்...

சாலையில் உலா வரும் மாடுகள் – விபத்தில் சிக்கும் வாகனங்கள்

கும்பகோணம்: மேலக்காவேரி பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலக்காவேரி காவிரி ஆற்றுப்பாலம், கடை வீதி மற்றும் நகர சாலைகளில் பல இடங்களிலும் காலையிலிருந்து மாலை வரை கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றித் திரிவதுடன், சாலையிலேயே படுத்துக் கொள்கின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு நேரிடுவதுடன், விபத்தும் ஏற்படுகிறது. பொதுமக்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக மேலக்காவேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள்…

மேலும்...

பாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்!

கேளம்பாக்கம் (27 அக் 2020): நான் பாஜக சார்பில் போராட வரவில்லை என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். . விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை எதிர்த்து போராட்டம் நடத்திய குஷ்பூ இன்று காலை கைது செய்யப்பட்டார் பின்பு மாலை விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பின்னர் கேளம்பாக்கத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; “தேர்தல் சமயத்தில் மட்டுமே சிலர் கோவில்களுக்கு செல்கின்றனர். பெண்களைப் பற்றி இழிவாக பேசியதால், திருமாவளவனுக்கு எதிராக போராட்டம்…

மேலும்...

அமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்!

சென்னை (27 அக் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு எம்.பி., அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு: மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் வணக்கம். பொருள்: நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, மருத்துவப் படிப்புகளில் 7.5% முன்னுரிமை ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவிற்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள்…

மேலும்...