ஏழை தாயின் மகனுக்கு ஏழைகள் குறித்து தெரியாதது வேடிக்கை – மோடி மீது ஸ்டாலின் தாக்கு!

சென்னை (07 டிச 2020): டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நியாயமானவை என்றும் விவசாய சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அனைத்து எதிர் கட்சிகள் நடத்திய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டதில் திமுகவின் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்ட.ன. இதில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் டிசம்பர் 8 விவசாயிகளின் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய ஸ்டாலின், விவசாயிகளின் போராட்டம் நியாயமானது., அவர்கள் வெற்றியுடனேயே போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு…

மேலும்...

தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரிக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (06 டிச 2020): தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது வரை தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல், பொதுமக்கள் மட்டுமில்லாது, அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்களையும் பாதித்துவருகிறது. இந்தியாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்ட பலரையும் கொரோனா வைரஸ் பாதித்தது. தமிழகத்தைப்…

மேலும்...

விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி குரல்!

சென்னை (06 டிச 2020): விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்த அவரது ட்வீட்டர் பதிவில், “நீர் பற்றாக்குறை மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக விவசாயிகள் பாதிப்படைவது ஒருபுறம் என்றால், இதுபோன்ற சட்டங்களாலும் விவசாயிகள் பாதிக்கபப்டுகின்றனர். என்று கார்த்தி தெரிவித்துள்ளார். மேலும் “விவசாய மசோதாவை எதிர்த்து விவசாயிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் ஒற்றை அடையாளமாக அவர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக அணிவகுத்துள்ளனர்.” என்று கார்த்தி கூறியுள்ளார்…..

மேலும்...

புரேவி சூறாவளி – கனமழைக்கு தமிழகத்தில் 11 பேர் பலி!

சென்னை (05 டிச 2020):புரேவி சூறாவளியின் வலிமை குறைந்துவிட்டாலும், தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையில் 11 பேர் கொல்லப்பட்டனர். கடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு தாயும் மகளும் கொல்லப்பட்டனர். கஞ்சிபுரத்தில் மூன்று இளம் பெண்கள் ஆற்றில் விழுந்து இறந்தனர். இருவர் மின்சாரம் தாக்கி இறந்தனர். சென்னை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தலா ஒருவர் இறந்தார். சென்னையில், லேசான மழை பெய்தது. . தெற்கு மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர்…

மேலும்...

ரஜினியுடன் கூட்டணி – ஓபிஎஸ் அதிரடி!

சென்னை (03 நவ 2020): வருங்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் ஜனவரியில் கட்சியை துவங்க உள்ளதாகவும், டிசம்பர் 31-ல் அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் அரசியல் வருகையை…

மேலும்...

விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப் படுத்திய ஜி.கே.வாசன்!

சென்னை (02 டிச 2020): டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் விதமாக ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எதிர் கட்சிகளிடையே இப்போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. இது இப்படியிருக்க க த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இப்போராட்டம் குறித்து கூறுகையில் “எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படுகிறது. குறுகியகால நன்மையை கூறி விவசாயிகளின் வருங்கால தொடர் வளர்ச்சி, வருமானத்தை…

மேலும்...

புரவி புயல் – தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!

சென்னை (02 டிச 2020): நிவர் பயலை தொடர்ந்து மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்தது. இதையடுத்து நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. புரெவி புயல், பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவிலும், குமரிக்கு 650…

மேலும்...

நாளை உருவாகும் புதிய புயல்!

சென்னை (30 நவ 2020):நாளை காலை புதிய புயல் உருவாகஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுவடைகிறது. நாளை மறுநாள் இலங்கையை கடந்து புயல் குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே 975 கிலோ மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஆழ்ந்த…

மேலும்...

கல்லூரி இளைநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7 ஆம் தேதி முதல் தொடக்கம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

சென்னை (30 நவ 2020): தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு இன்றோடு முடிவுக்கு வரும் நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, தமிழத்தில் டிச.31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு . மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் டிசம்பர் 7 ஆம்…

மேலும்...

நிவர் புயலும் தமிழகமும் – முதல்வர் பெருமிதம்!

சென்னை (28 நவ 2020): அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். முதல்வர் பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு அவர் தெரிவித்ததாவது : அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் என்பது மகிழ்ச்சி தருகிறது. ஆந்திராவில் பெய்த மழையால் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும்…

மேலும்...