அதிமுகவுக்கு ஆப்பு வைக்க தயாராகும் பாஜக!

சென்னை (30 டிச 2020): தேர்தலுக்கு பிறகே முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும் என்பதாக பாஜக தெரிவித்துள்ளது அதிமுக கூட்டணி கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் கடந்த சில தினங்களாக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாஜக தலைவர்கள் முதல்வர் வேட்பாளர் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையிலான தேசிய…

மேலும்...

அரசியலுக்கு முழுக்கு – தமிழருவி மணியன் திடீர் அறிவிப்பு!

சென்னை (30 டிச 2020): இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில், “என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்து விட்டது. சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம்…

மேலும்...

ரஜினியிடம் ஆதரவு கோரும் கமல்!

புதுக்கோட்டை (30 டிச 2020): நண்பர் என்கிற முறையில் ரஜினியிடம் ஆதரவு கோரவுள்ளதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபட போவதில்லை என ரஜினி கூறியுள்ள நிலையில் கமல் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல் ஹாசன், “ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். சென்னை சென்றதும் ரஜினியை சந்தித்து பேசுவேன். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன்…

மேலும்...

கட்சி தொடங்கவில்லை – நடிகர் ரஜினி பரபரப்பு அறிக்கை!

சென்னை (29 டிச 2020): கட்சி தொடங்குவதிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் பின்வாங்கினார். நடிகர் ரஜினிகாந்த் ‘அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ந்தேதியன்று வெளியிடப்படும்’ என்றும் கடந்த 3-ந்தேதி அறிவித்து இருந்தார். அடுத்த மாதம் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால், அதற்கு முன்பாக ‘அண்ணாத்த’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக படமாக்கி முடித்துவிடும்படி படக்குழுவினரிடம், ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். இதையடுத்து கடந்த 14-ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள…

மேலும்...

ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழருவி மணியன் பகீர் தகவல்!

சென்னை (28 டிச 2020): ரஜினியின் உடல் சரியில்லாத நிலையில் தமிழருவி மணியனின் பேட்டி, ரஜினியின் நல விரும்பிகளை பதற வைத்துள்ளது. ரஜினி ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன நிலையில் மருத்துவமனை அறிவுறுத்தலின் படி, ரஜினிகாந்த் ஒரு வார காலத்துக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும்; கொரோனா தாக்கக் கூடிய சூழ்நிலைகளில் இருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தியிருந்தது. இதனால் ஏற்கனவே ரஜினிகாந்த் திட்டமிட்டபடி டிசம்பர் 31-ல் புதிய கட்சியின் பெயரை அறிவிப்பது…

மேலும்...

ரஜினிக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை – கட்சி தொடங்குவதில் சிக்கல்!

ஐதராபாத் (27 டிச 2020): மருத்துவமனையிலிருந்து டிஸ்சாரஜ் ஆன ரஜினி பாதுகாப்புடனும் அதிக ஸ்ட்ரெஸ் இல்லாமல் ஓய்வுடன் இருக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு வாரம் முழுஓய்வில் இருக்கவேண்டும் மற்றும் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இன்று மாலையே தனி விமானத்தில் சென்னை திரும்புகிறார்…

மேலும்...

ரஜினி டிஸ்சார்ஜ் குறித்து அப்பல்லோ குழப்பமான தகவல்!

ஐதராபாத் (27 டிச 2020): ரஜினி இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆவார் என்று ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கூறியுள்ள நிலையில் டிஸ்சார்ஜ் குறித்து இன்று மதியம்தான் எடுக்கப்படும் என அப்பல்லோ நிர்வாகம் கூறியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த போது படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்தநிலையில் திடீரென ரஜினிகாந்த் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோவில் சி சிகிச்சைக்காக…

மேலும்...

ரஜினி டிஸ்சார்ஜ் – கட்சி நிர்வாகிகளை சந்திக்க வாய்ப்பில்லை!

சென்னை (27 டிச 2020): நடிகர் ரஜினி இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இந்த தகவலை ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணன் உறுதி செய்தார் நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த போது படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்தநிலையில் திடீரென ரஜினிகாந்த் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோவில் சி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனை ஏற்று ரஜினிகாந்த் கடந்த 3…

மேலும்...

ரஜினியின் ரத்த அழுத்தம் குறையவில்லை – டிஸ்சார்ஜ் செய்வதில் தாமதம்!

ஐதராபாத் (26 டிச 2020): ரஜினியின் ரத்த அழுத்தம் குறையாததால் ரஜினியை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து நாளை காலை முடிவெடுப்பதாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாய் அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும், சென்னை திரும்பாமல் ஐதராபாத்தில் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்….

மேலும்...

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி இல்லையா? – பீதியை கிளப்பும் செல்லூர் ராஜூ!

மதுரை (26 டிச 2020): அகில இந்திய கட்சி என்பதால் பாஜக தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மதுரை பழங்காநத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் வேட்பாளர் குறித்து தெரிவிக்கையில், “பாரதிய ஜனதாவை பொறுத்தவை அகில இந்திய கட்சி என்பதால் அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான்…

மேலும்...