தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் – கலக்கத்தில் பெரிய தலைகள்!

சென்னை (01 டிச 2022): சமீபத்திய நிகழ்வுகளால் தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் திருச்சி சூர்யா சிவா, சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுடன் பேசிய போன் உரையால் ஆடியோ கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டெய்சியை ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சித்த சூர்யா, பதவிக்கு வந்தது எப்படி என கேசவ விநாயகத்தையும் தொடர்பு படுத்தி ஆபாசமாகப் பேசினார். இதனைத்…

மேலும்...

தமிழகத்தில் சுழற்றி எடுக்கவுள்ள காற்றும் மழையும்!

சென்னை (01 டிச 2022): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் அந்தமான் அருகே டிசம்பர் 5ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இன்றைய தினம் தமிழகம், புதுச்சேரிக்கு நல்ல மழை இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.. மேலும் அரபிக்…

மேலும்...

கீழக்கரை திமுக கவுன்சிலர் போதைப்பொருள் கடத்தவில்லை – சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்!

ராமநாதபுரம் (30 நவ 2022): ராமநாதபுரத்திலிருந்து கடத்தப்பட்ட பொருள் போதைபொருள் அல்ல என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி வார்டு திமுக கவுன்சிலர் சர்பராஸ் நவாஸ் மற்றும் கீழக்கரை திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெய்னுதீன் என்பவரும் இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் கடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதனை பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட, பல பாஜக பிரமுகர்களும் சமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிராகவும், கவுன்சிலர் போதைப்பொருள் கடத்தியதாகவும் பரப்பி வந்தனர். இந்த நிலையில்…

மேலும்...

இந்து பெண்ணுடன் பேருந்தில் பயணித்த முஸ்லிம் இளைஞன் மீது தாக்குதல்!

மங்களூரு (30 நவ 2022): ஒரு முஸ்லீம் இளைஞன் ஒரு இந்து பெண்ணுடன் பஸ்ஸில் பயணிப்பதைக் கண்டு பஜ்ரங் தள் தொண்டர்களால் தாக்கப்பட்டார். கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நந்தூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கர்நாடக காவல்துறை ஏடிஜி ட்வீட் செய்துள்ளார்.

மேலும்...

ஆளுநர் ரவிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு!

சென்னை (29 நவ 2022): காஞ்சிபுரம் மாவட்டம் தஞ்சை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றியும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருகிறார். தமிழக அரசு அனுப்பியுள்ள கோப்புகளுக்கு உரிய கையெழுத்து போடாமல், காலம் தாழ்த்துகிறா ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தின் கீழ் தலைவர் பதவி என்பது சம்பளம்…

மேலும்...

சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கும் அநீதி – நவாஸ்கனி கண்டனம்!

சென்னை (29 நவ 2022): ப்ரி மெட்ரிக் உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டு இருப்பது சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும் என எம்.பி கே.நவாஸ்கனி கூறியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்களுக்கு நவாஸ்கனி எம்பி எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறுபான்மை நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த ப்ரி மெட்ரிக் உதவித்தொகை இனி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு…

மேலும்...

முதல்வர் ஸ்டாலினுக்கு : தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட கே.எஸ். ராதாகிருஷ்ணன் திறந்த மடல்!

சென்னை (29 நவ 2022): தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட கே.எஸ். ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு திறந்த மடல் எழுதியுள்ளர். அதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நோக்கி இதுதான் தார்மீகமா? பண்பாடா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கே.எஸ். ராதாகிருஷ்ணன் குறையொன்றும் இல்லை என்ற தலைப்பில் தொடராக திறந்த மடல் கட்டுரை எழுதி வருகிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது: “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு… இறுதியாக சொல்ல வேண்டிய சில விடயங்கள்… வைகோ போன்றவர்களால் என்னுடைய அரசியல் பயணத்தில் தடை…

மேலும்...

சூர்யா டெய்ஸி ஆபாச ஆடியோ வெளியானதன் பின்னணியில் அண்ணாமலை? – அதிர்ச்சியில் மூத்த தலைவர்கள்!

சென்னை (27 நவ 2022): பாஜ பெண் நிர்வாகி டெய்சி, திருச்சி சூர்யா ஆகியோர் பேசிய ஆபாச ஆடியோக்களை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கலாம் என்கிற தகவல் பாஜக மூத்த தலைவர்கள அதிர வைத்துள்ளது. பாஜக சிறுபான்மையின பெண் நிர்வாகி டெய்சி சரண், ஓபிசி அணி மாநில நிர்வாகி திருச்சி சூர்யா ஆகியோர் ஆபாசமாக பேசும் ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்தி டெல்லி மேலிடம் உத்தரவிட்டது….

மேலும்...

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் – செந்தில் பாலாஜி!

சென்னை (27 நவ 2022): மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஏதுவாக நாளை மறுநாள் முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மின்கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, தமிழகத்தில் உள்ள அனைத்து மின் அலுவலங்களிலும் நாளை மறுநாள் முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்தப்படும் என கூறியுள்ளார். பண்டிகை தினங்கள் தவிர்த்து, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து…

மேலும்...

தனது வீட்டுக்கு தானே வெடிகுண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது!

கும்பகோணம் (22 நவ 2022): தனது வீட்டுக்கு தானே வெடிகுண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம், மேலக்காவேரி, காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி (38) கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மாலதி (37) மகன் இனியன் (11). சக்கரபாணி இந்து முன்னணி மாநகர செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சக்கரபாணி மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அவருடைய வீட்டு வாசலில் வீசப்பட்ட கண்ணாடி பாட்டில் உடைந்து சிதறி…

மேலும்...