ஈரான் துணை அதிபருக்கு கொரோனா பாதிப்பு!

ஈரான் (28 பிப் 2020): ஈரான் துணை அதிபரும், மகளிர் மற்றும் குடும்ப நலத்துறையை கவனித்து வருபவருமான மௌசூமே எப்தேகாருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவைத் தொடர்ந்து தற்போது ஈரானிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்நாட்டு துணை அதிபருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதால், அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் வைரஸ் பாதிப்பு இருப்பது…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்கள் சவூதிக்கு வருகை புரிய தற்காலிக தடை!

மக்கா (27 பிப் 2020): உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் எதிரொலியாக சவூதி அரேபியாவிற்கு வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது சவூதி அரசு. இதுகுறித்து சவூதி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உம்ரா மற்றும் சுற்றுலா விசாவில் சவூதி வருபவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே இந்தியாவிலிருந்து வரும் தகவல்படி, பல உம்ரா யாத்ரீகர்கள் இந்திய…

மேலும்...

முன்னாள் எகிப்து அதிபர் ஹுஸ்னி முபாரக் மரணம்!

கெய்ரோ (25 பிப் 2020): எகிப்து முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஹுஸ்னி முபாரக் எகிப்து ராணுவ மருத்துவமனையில் 91வது வயதில் காலமானார். முர்ஸி ஆட்சியில் ஹுஸ்னி முபாரக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்பு 2017ல் விடுதலை ஆனார். எகிப்த்தை 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர் ஹுஸ்னி முபாரக் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

பஹ்ரைனில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

பஹ்ரைன் (25 பிப் 2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதி வேகமாக பரவி வருகிறது. ‘கோவிட் – 19’ எனப் பெயரிடப்பட்டுள்ள, ‘கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உருவானது. தற்போது, தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கியுள்ளது.சீனாவுக்கு வெளியே, 30 நாடுகளில், 1,200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது….

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் இரானில் 6 பேர் பலி!

தெஹ்ரான் (23 பிப் 2020): இரானில் கொவைட்-19 (கொரோனா வைரஸ்) பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,442ஆக ஞாயிற்றுக்கிழமை உயா்ந்துள்ளது. இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 76,936க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 123 பேருக்கு…

மேலும்...

ஹஜ் யாத்திரையில் காணாமல் போகும் ஹஜ் யாத்திரீகர்களை கண்டுபிடிக்க கூடுதல் வசதி!

மக்கா (21 பிப் 2020): ‘ஸ்மார்ட் ஹஜ்’ (Smart Hajj) என்ற புதிய நடைமுறை 2021 ஹஜ் முதல் மேலும் கூடுதல் வசதிகளுடன் செயல்படுத்தப்படும் என்று சவூதி ஹஜ் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. புனித மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘ஸ்மார்ட் ஹஜ்’ (மொபைல் ஆப்) என்ற நடைமுறை ஏற்கனவே அறிமுகப் படுத்தப்பட்ட போதும், அதில் மேலும் கூடுதல் தொழில் நுட்பங்கள் இணைக்கப்படவுள்ளன. அதன்…

மேலும்...

சவூதியில் வாகனம் ஓட்டுபவர்களே எச்சரிக்கை!

ரியாத் (13 பிப் 2020): சாலைகளில் ஆங்காங்கே கேமராக்கள் பொறுத்தி சவூதி போக்குவரத்து கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சவூதியில் விபத்துக்களை குறைக்கும் வகையில் பல சாலைகளில் புதிய கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவோ, அல்லது உரிமம் ரத்துச் செய்யப்படவோ வாய்ப்பு உள்ளது. மேலும் தான் செல்லும் ட்ராக்கை அவசியமில்லாமல் விதிகளை மீறி மாறினாலும் கேமரா கண்டுபிடித்து எச்சரித்துவிடும். இதனால் வாகனம் ஓட்டுபவர்கள் அதிக அபராதங்கள் செலுத்த வாய்ப்பு உள்ளது. எனவே வாகனம்…

மேலும்...

தோஹா-திருச்சி நேரடி விமானச்சேவை – பயணிகள் மகிழ்ச்சி!

தோஹா (12 பிப்ரவரி 2020): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவிலிருந்து திருச்சிக்கு நேரடி விமானச் சேவையின்றி இதுநாள் வரை பெரும் அவதியில் இருந்த பயணிகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பட்ஜெட் விமானம், தோஹா-திருச்சி வழித்தடத்தில் தனது புதிய சேவையைத் துவக்கி இருக்கிறது. தோஹாவிலிருந்து திருச்சிக்கு நேரடி விமானச் சேவை இல்லாத காரணத்தால் திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தனர். இவர்கள் முறையே, தோஹா – சென்னை,…

மேலும்...

கத்தார் தேசிய விளையாட்டு தினம்!

தோஹா (11 பிப் 2020): கத்தார் நாட்டில் ஒன்பதாவது தேசிய விளையாட்டு தினம் பிப் 11 செவ்வயன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, காலை, கத்தார் விளையாட்டு கழகத்தில் உள்ள சுஹைம் பின் ஹமத் அரங்கத்தில் கத்தார் போலீஸ் விளையாட்டுக் கூட்டமைப்பு (QPSF) சார்பில், மூத்த அதிகாரிகள் முன்னிலையில் பல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில், கத்தார் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் காலித் பின் கலிஃபா பின் அப்துல் அஜிஸ் அல்-தாணி (Sheikh Khalid…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

துபாய் (09 பிப் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப் பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக ஆரோக்கிய அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் (UAE Ministry of Health and Prevention (MoHAP)) ஏற்கனவே ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆக இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா…

மேலும்...