பாலஸ்தீன நாயகனை வரவேற்ற நாள் இன்று…..!

Share this News:

இன்று ஜூலை1.

1994ம் ஆண்டு,மறைந்த பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அரஃபாத் எகிப்திலிருந்து ரஸா வழியே காஸாவை வந்தடைந்து பாலஸ்தீனத்தில் காலடியெடுத்து வைத்த தினம்.

யாசர் அரஃபாத்தை பாலஸ்தீன புரட்சியின் தலைவராகவும், ஒரு நாயகனாகவும் கருதி ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வரவேற்ற நாள் இன்று…

யாசர் அரஃபாத்:ஒரு அறிமுகம்

ஹிட்லரால் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட யூதர்கள் மீது உலகளவில் அனுதாபம் ஏற்பட்டது. எத்துணை பாவப்பட்ட மக்கள் யூதர்கள்! எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்! இவர்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையே அமையாதா, என்ன..?என்றெல்லாம் உலக மக்கள் யூதர்களுக்காக அனுதாபப்பட்டனர்.

அந்த அனுதாபத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தது பிரிட்டன். பாலஸ்தீன முஸ்லிம்களை கருவறுப்பதற்காக இந்த அரிய வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று முடிவு செய்தது. ஆகவே பாலஸ்தீன முஸ்லிம்களிடமிருந்து, அவர்களின் பூர்வீக பூமியைப் பறித்து, “அநியாயமாக” யூதர்களிடம் கொடுத்தது.அதற்கு துணை நின்றது,
அமெரிக்கா..!

பல்வேறு உலகத் தலைவர்களுடன் சேர்ந்து, இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளும் அப்போது இந்த வஞ்சகத்தை வன்மையாகக் கண்டித்தார்கள். தனது ஹரிஜன் பத்திரிகையில் இந்த அநியாயத்தை கிரிமினல் குற்றமாக வர்ணித்தார்கள்.

பாலஸ்தீன நிலம் இஸ்ரேலாக மாற்றப்பட்ட பிறகு யூதர்களின் அட்டூழியங்களும் கொடூரங்களும் மிக உக்கிரமாக நடைபெற ஆரம்பித்தது.
ஹிட்லர் யூதர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு, சற்றும் குறைவில்லாத கொடுமைகளை பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது யூதர்கள் இழைத்தனர்.

அரவணைத்தவர்களயே அழிக்க நினைத்தனர் யூதர்கள்.

ஆகவே யூத இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்களும் எதிர்ப்புகளும் பொறியாக ஆரம்பித்து பாலஸ்தீன பூமி முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.

அப்போதுதான், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PALESTINE LIBERATION ORGANIZATION-PLO) எனும் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவராக செயலாற்றியவர்தான் இந்த யாசர் அர ஃபாத்.

இவர் மட்டுமல்ல, இவர் தந்தையும் பாலஸ்தீன விடுதலைக்காக போராடியவர்.

1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததை அடுத்து நடந்த அரபு-இஸ்ரேல் போரின் போது, அரஃபாத்தின் தந்தையார் கொல்லப்பட்டார்.

சுயநிர்ணய-பாலஸ்தீனம் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான போராட்டம் ஒன்றை ஆரம்பித்து நடத்தினார், யாசர் அர ஃபாத்.! இவருடைய போராட்ட முறைகளினால் இஸ்ரேலிய அரசாங்கத்தினர் திக்குமுக்காடினர்.

பலஸ்தீனப் போராட்டத்தில் யாசர் அரஃபாத் பயன்படுத்திய மிக முக்கியமான யுக்தி இன்திஃபாதா! இதன் பொருள்,எழுச்சி அல்லது சுயபாதுகாப்பு பேரணி என்பது..!

மக்களை முன்னிறுத்தி இம்மாபெரும் எழுச்சிப் போரணியை துவக்கினார் யாசர் அரஃபாத். மக்கள் கையில் எடுத்த ஆயுதம் என்ன தெரியுமா,?வெறும் கற்கள்.

பாலஸ்தீனியர்களின் இந்த எழுச்சிப் பேரணியைத் தடுக்க பயங்கரவாத இஸ்ரேல் இராணுவத்தினரோ புகைக்குண்டுகளையும் இன்ன பிற ஆயுதங்களையும் பயன்படுத்தினர். ஆனால் மக்கள் அமைதியான முறையில் கற்களைக் கொண்டு எதிர்தாக்குதல் தாெடுத்தனர். இது இஸ்ரேலுக்கு உலக அளவில் மிகப் பெரும் கண்டனத்தைப் பெற்றுத் தந்தது. பாலஸ்தீனர்களின் மீதான நியாயமான அனுதாபத்தையும் அதிகரித்தது.

தன்னுடைய போராட்ட வழிமுறைகளை மிகவும் நேர்த்தியாக அமைத்தி செயல்பட்டார்., யாசர் அரஃபாத்.

இது இஸ்ரேலுக்கு மிகப்பெரும் தலைவலியாக இருந்தது. இவரை தீர்த்துக் கட்ட இஸ்ரேல் துடியாய் துடித்துக் கொண்டிருந்தது.

அவருடைய இறுதியில் 2004ம் ஆண்டில் பிரான்சின் இராணுவ மருத்துவமனையில் காலமானார்.

சீரற்ற இரத்த ஓட்டம் என்று அவருடைய மரணத்துக்கு காரணம் கூறப்பட்டது. ஒரு விடுதலை இயக்கத் தலைவனின் சுதந்தர பாலஸ்தீன கனவு இன்று வரை கனவாகவே இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


Share this News: