சென்னை ஷாஹின் பாக்கில் சீமானின் சீற்றம்!

Share this News:

சென்னை (16 பிப் 2020): சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதிக்கு வந்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது மேடையில் பேசிய சீமான் கூறுகையில், “எனக்கு என் பாஸ்போர்டை கொடுங்கள் வேறு நாட்டுக்கு செல்கிறேன் என்ற நிலை தான் உள்ளது. ஜக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினார்கள் என்றால் அவர்களுக்கான வேலையையும் இடத்தையும் கொடுபீர்களா?

நாம் இப்போது அழிவு காலத்தில் இருக்கிறோம் என்றும், ஒரு தலைவன் தன் நாட்டை, மக்களை பற்றி சிந்திக்க தொடங்கினால் அவர்களுக்கு ஜாதி, மதம் பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. ஆனால் தற்போது மதம், ஜாதி என்பதை தூக்கிப்பிடித்து கொண்டிருக்கும் அரசை பார்க்கிறோம். இங்கு மதத்திற்கும், அரசிற்கும் வேறுபாடு இல்லை என்ற நிலை உள்ளது.

பல ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் மக்களை குடியுரிமை இல்லை என்று கூறுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

குடியுரிமை திருத்தச் சட்டம் மனித குலத்திற்கு எதிரானது. இதை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். இந்தச் சட்டத்தைத் திரும்பபெறும் வரை இதை நாம் கைவிடக் கூடாது.

எனவே நாம் ஒன்றிணைந்து போராடி நம்மை நாம் தற்காத்துக் கொள்ளவேண்டும். அமைதியாக போராடியவர்களை தடியடி நடத்தியதை ஏற்க முடியாது. ஒரு இடத்தில் போராட்டம் நடத்த விட்டிருந்தால் அமைதியாக முடிந்து இருக்கும். ஆனால் தேவையில்லாமல் தடியடி நடத்தி பல இடங்களில் போராட்டம் நடத்த வழிவகை செய்து விட்டனர். இந்நிலையில் நம் உரிமையை பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.”என்றார்.


Share this News:

Leave a Reply