சென்னை ஷஹீன்பாக்: பிப் 19 ல் அனைத்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை – VIDEO

Share this News:

சென்னை (16 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் பிப்ரவரி 19ல் அனைத்து கலெக்டர் அலுவலகங்களையும் முற்றுகையிட அனைத்து மாவட்ட மக்களும் முடிவு செய்துள்ளனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய கண்மூடித் தனமான தாக்குதலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேற்று மாலை சந்தித்தனர். அதன் பின் “தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக பிப்.19ஆம் தேதி இஸ்லாமிய கூட்டமைப்பினர் சார்பில் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.” என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

அதே தினத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களையும் முற்றுகையிட அனைத்து மாவட்ட மக்களும் முடிவு செய்துள்ளனர்.

இது இப்படியிருக்க குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெறும்வரை சென்னை ஷஹீன் பாக் (வண்ணாரப்பேட்டை) போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply