போலீசாரை ஏமாற்றிய இந்து ஜனநாயக அமைப்பினர்!

Share this News:

சென்னை (26 ஜன 2020): போராட்டத்திற்கு 200 பேர் வருவோம் என்று கூறிவிட்டு வெறும் 16 பேர் மட்டுமே வந்த இந்து ஜனநாயக அமைப்பினர் போலீசாரை தலையில் கை வைக்க வைத்துவிட்டனர்.

பெரியாருக்கு எதிராக ரஜினி கூறிய கருத்து பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில், திக தலைவர் கி.வீரமணி வீட்டை முற்றுகையிடப் போவதாக இந்து ஜனநாயக அமைப்பினர் அறிவித்திருந்தனர். மேலும் அந்த அமைப்பின் நிர்வாகி ஆனந்தன் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு 200 பேருக்கு மேல் வருவோம் என்று போலீசுக்கு தகவல் கொடுத்திருந்தார்.

ஆனால் 12 மணியாகியும் வெறும்16 பேர் மட்டுமே வந்து கோஷமிட்டனர். போதாதற்கு அவர்களாகவே போலீஸ் வேனில் ஏறி போலீசாரை வேடிக்கை பார்க்க வைத்தனர்.

200 பேருக்கு சாப்பாடு, அவர்களை தங்க வைக்க திருமண மண்டபம் என சகல ஏற்பாடுகளுடன் இருந்த போலிசார் வெறும் 16 பேரால் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.


Share this News:

Leave a Reply