குடியுரிமை சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல – கிறிஸ்தவ சர்ச்சில் தீர்மானம்!

Share this News:

திருவனந்தபுரம் (26 ஜன 2020): “மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல!…” என்று லத்தின் கத்தோலிக் கிறிஸ்தவ தேவாலயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவனந்தபுரம் கத்தோலிக் கிறிஸ்தவ தேவாலய ஆயர் அங்கிருந்த கிறிஸ்தவர்கள் முன்னிலையில், தேவாலய தீர்மான கடிதம் ஒன்றை வாசித்தார். அதில், “இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல… ஒட்டு மொத்த இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது.

இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரான எல்லா சக்திகளுக்கும் எதிராக போராட நாம் தயாராக வேண்டும். நமது தேவை நாட்டின் அனைத்து மக்களின் ஒற்றுமையே…” என்பதாக அந்த கடிதத்தில் இருந்தது.

கேரளாவில் ஞாயிறன்று அனைத்து மதத்தினரும் பங்கேற்ற 620 கி.மீ தூரமுள்ள மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply