சிறுபான்மையினருக்கு பொன் ராதா கிருஷ்ணன் பகிரங்க மிரட்டல்!

Share this News:

சென்னை (02 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டும் முஸ்லிம்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

முஸ்லிம்களை குறி வைத்து பாஜக அரசால் இயற்றப்பட்டுள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் அனைத்து சமூக மக்களும் இது இந்திய இறையாண்மைக்கு எதிரான சட்டம் என்று பாகுபாடின்றி அமைதியான வழியில் போராடி வரும் நிலையில், சிறுபான்மையினருக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

அதாவது முஸ்லிம்கள், சிறுபான்மையினர் போராட்டம் தொடருமெனில் நாங்களும் களத்தில் இறங்கும் நிலை ஏற்படும் என்றும் அதனால் கலவரம் மூளும் என்றும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொன் ராதாகிருஷ்ணனின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply